இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் போருக்கு தயாராகி வர காரணம் காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் தான். காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பைசரன் பகுதியில், ஏப்ரல் 22 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் குழு என்று கருதப்படும் தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.

இதனை அடுத்து, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போருக்கு தயாராகி வருவதால் இரண்டு நாடுகளில் உள்ள மக்களும் பதற்றத்தில் உள்ளனர். மேலும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல கூடிய நீர் முதல் போக்குவரத்து வரை அனைத்தும் தடை செய்துள்ளது இந்திய அரசாங்கம். அதே போல் பாகிஸ்தானிலும் வான்வழி பயணங்களில் இந்தியாவிற்கு தடை விதித்துள்ளது.
இனி எந்த பேச்சுவார்த்தையும் அல்ல, இந்தியா அடித்தால் திருப்பி அடிப்போம் என பாகிஸ்தானும் எதிர்த்து நிற்கிறது. எனவே உலகநாடுகள் அனைத்தும் இந்த பிரச்சனையை உற்றுநோக்கி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் தங்களது ஏவுகணைகளை சோதனை செய்து வருகின்றனர். இதனால் இருநாடுகளிடையேயும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது .
இதையும் படிங்க: CSK ஆட்டத்தை பார்க்க வந்த AK... கூடவே இருந்த SK; உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இதனை குறித்து இந்திய நடிகர்களான, சூர்யா, ஆண்ட்ரியா, காஜல் அகர்வால், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல நடிகர்களும், பத்திரிக்கையாளர்களும், தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தற்பொழுது நடிகர் அஜித்தும் பாகிஸ்தான் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். நேற்று டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் பங்கு கொண்ட நடிகர் அஜித், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் பத்ம பூஷன் விருதை பெற்றார். பின் அந்த மகிழ்ச்சியான தருணத்தை தனது குடும்பத்துடன் பகிர்ந்து கொண்டு அதன் புகைபடங்களையும் வெளியிட்டார்.

இந்த சூழலில் அஜித் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, இனி இதுபோல் யாருக்கும் நடக்கக் கூடாது என்று தெரிவித்த அவர், இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். உண்மையில் எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால் தான் நாம் இன்றும் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆதலால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் துரிதமான நடவடிக்கை எடுக்கும் என்றும், இந்த நேரத்தில் வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அமைதியாக வாழ அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்போம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஊருக்கே 'தல'ன்னாலும் மனைவிக்கு புருஷன் தானே..! ஷாலினிக்கு கேக் ஊட்டிவிட்ட அஜித்..!