2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிக்கு நிச்சயம் வரும். தமிழக மக்களுக்கான வளர்ச்சியைத் தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தடுத்து வருகிறார்கள்.

திமுக அரசில் உள்ள ஒன்பதுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு என்றால், இவர்கள் யாருடைய பணத்தை சுரண்டினார்கள்? அந்தப் பணம் தமிழக மக்களுடையது பணம் ஆகும்.
எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் நிதி வரவில்லை என்று தமிழகத்தில் கூறுகிறார்கள். ஆனால், இவர்கள் சுருட்டிய பணம் மத்திய அரசிடம் கேட்பதைவிட மிக அதிகமானதாக இருக்கும். அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வருவது எதற்காக என்றால், மக்களின் பணத்தைச் சுரண்டுவதற்காகத்தான் தவிர வேறு எதற்கும் இல்லை. தங்களுடைய தோல்விகளை மறைக்கவே தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசின் மீது குற்றம் சாட்டி வருகிறார்” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பக்தி பரவசத்தில் மூழ்கிய அண்ணாமலை.. அமெரிக்க கோவிலில் மோடி பெயரில் அர்ச்சனை..!
இதையும் படிங்க: தபால்காரருடன் சிரிச்சு சிரிச்சு கைகுலுக்கிய ஸ்டாலின்..! பங்கம் பண்ணும் பாஜக..!