இந்தியாமட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்திலும் பலரும் பார்க்கும் ஒரே அழகான நிகழ்ச்சி என்றால் அதுதான் சமையல் நிகழ்ச்சி. ஒரு காலத்தில் பெப்சி உமா சமையல் நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறாராம் தெரியுமா என சொல்லுவதை நம் காதுகளில் கேட்டு இருப்போம். அப்படி பட்ட நிகழ்ச்சிகளை நம் யாராலும் மரக்க முடியாது. புதிய உணவுகளை செய்து கணவரை கவுக்க அப்பொழுது உள்ள பெண்கள் தொலைக்காட்சியில் மதியவேளைகளில் ஒளிபரப்பாக இருக்கும் சமையல் நிகழ்ச்சிகளுக்காக காத்து கொண்டு இருப்பர்.

மேலும், காலம் அப்படியே மாற சமூக வலைத்தளங்களில் சமையல் பற்றிய நிகழ்ச்சிகளை பெண்கள் மற்றும் ஆண்கள் பதிவு செய்து வர, ரசம் வைக்க வேண்டுமானாலும் உடனே யூடியூபுக்கு சென்று பார்க்கும் அளவிற்கு பாட்டி சமையல், கிராமத்து சமையல், சிட்டி சமையல், வெளிநாட்டு சமையல் என பல சமையல் நிகழ்ச்சிகளை யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என அனைத்திலும் பதிவிட, இப்பொழுது உள்ள அனைவரும் அதனை பார்த்து சமையலை கற்று கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கண்ணை கட்டும் அழகு! குட்டை உடையில் ஒயிட் ஏஞ்சலாக மாறிய ஐஸ்வர்யா மேனன்!

இந்த சூழலில், சமையல் நிகழ்ச்சி என்று ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் செய்த சமையல் எப்படி உள்ளது...நன்றாக உள்ளதா..? இல்லையா..? என அனைத்தையும் குறித்து பேசி இணையத்தில் பதிவிட்டால் லைக்ஸ் அமோகமாக வருகிறது. அதுமட்டுமல்லாமல், முதலை கறி, வாத்து கறி, பாம்பு கறி என அனைத்தையும் வைத்து சமையல் செய்து "இன்னைக்கு ஒரு புடி, ஆல்வேஸ் வெல்கம் யூ, எல்லாரும் வாங்க" என அழைத்தே பல மில்லியன் பார்வையாளர்களை வைத்து லட்சங்களில் சம்பாரித்து வருகின்றனர்.

இதனை பார்த்த பிரபல தனியார் சேனல் ஒன்று சமையல் நிகழ்ச்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் ஆனால் மக்கள் அனைவரும் அதை பார்க்க வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என யோசித்து. நம்மிடம் கோமாளிகள் தான் உள்ளனர் குக்குகள் எப்படி என யோசித்து உள்ளனர். பின் இது நன்றாக உள்ளதே சமையல் செய்ப்பவர்களுக்கு உதவியாக ஆட்களை வைக்க யாரையோ அழைப்பதை விட நம் குக்குகளை வைத்தே செய்யலாமே என எண்ணி, குக் ப்ளஸ் கோமாளி என இரண்டையும் இணைத்து "குக் வித் கோமாளி" என்ற நிகழ்ச்சியை கொண்டு வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பெரிய ஹீரோக்கள் என சொன்னால், புகழ், பாலா, சுனிதா, ப்ரவீனா, ராமர், சரத் உள்ளிட்ட அனைவரும் தான். அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சி பயங்கர ஹிட் அடித்தது. அப்படி பல நாட்களாக வெற்றிகரமாக ஓடிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஒரே எபிசோடில் வந்து முடித்த பெருமை தொகுப்பாளினி பிரியங்காவையே சேரும். காரணம் அந்த ஷோவில் அழகாக தொகுப்பாளினி வேலை செய்து வந்த மணிமேகலைக்கும் அவருக்கும் தொழில் சண்டை வர, அந்த பிரச்சனை பூதாகாரணமானது. பின் மணிமேகலை அந்த ஷோவில் இருந்து வெளியே வர பிரியங்காதான் வின்னர் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்ல, ரசிகர்களால் அதனை ஏற்று கொள்ள முடியவில்லை.

இப்படி இருக்கையில் தற்பொழுது குக் வித் கோமாளி குறித்ததான சிறப்பான அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, குக் வித் கோமாளி சீசன் 6 வருகின்ற மே மாதம் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில், முக்கிய கோமாளிகளாக புகழ், சரத், ஜெயசந்திரன், சுனிதா, ராமர் ஆகியோர் முக்கிய கோமாளிகளாக களமிறங்க பிக்பாஸ் 8 புகழ் சௌந்தர்யா இவர்கள் லிஸ்டில் புதியதாக இணைந்துள்ளனர். மேலும், தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் நடுவர்களாக இருக்க இவர்களுடன் புதியதாக கௌஷிக் ஷங்கர் களமிறங்க உள்ளார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் டிசைனருடன் நெருக்கம்... துரோகி... பிரபல நடிகையை நார் நாராக கிழிக்கும் மக்கள்..!