2025 ஐபிஎல் சீஸனில் இன்றைய போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரேன் மற்றும் குர்பாஸ் களமிறங்கினர்.

குர்பாஸ் 12 பந்துகளில் 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சுனில் நரேன் 16 பந்துகளில் 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ரஹானே களமிறங்கினார். அவர் மிட்சல் ஸ்டார்க்கை அட்டாக் செய்ய, பவர் பிளே ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 79 ரன்களை எட்டியது. இதனைத் தொடர்ந்து விப்ராஜ் வீசிய 7வது ஓவரில் சுனில் நரைன் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அக்சர் படேல் வீசிய அடுத்த ஓவரிலேயே ரஹானே 26 ரன்களில் வெளியேறினார். இதனால் கொல்கத்தா அணி 91 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ரகுவன்ஷி அதிரடியாக விளையாட, வெங்கடேஷ் ஐயர் வழக்கம் போல் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையும் படிங்க: GT-யின் பந்துவீச்சை துவம்சம் செய்த சூர்யவன்ஷி... 8 விக்கெட் வித்தியாசத்தில் RR வெற்றி!!

தொடர்ந்து ரகுவன்ஷி - ரிங்கு சிங் கூட்டணி இணைந்து கொல்கத்தா அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ஓவருக்கு கட்டாயம் ஒரு பவுண்டரி அடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்ததால், கொல்கத்தா அணியின் ஸ்கோர் 15 ஓவர்களில் 159 ரன்களாக உயர்ந்தது. இந்த நிலையில் சிறப்பாக ஆடிய ரகுவன்ஷி 44 ரன்களில் ஆட்டமிழக்க, ஃபினிஷிங் செய்யும் பொறுப்பு ரிங்கு சிங் - ரஸ்ஸல் கூட்டணி வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் ரிங்கு சிங் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் 36 ரன்களில் ஆட்டமிழக்க, ரோவ்மன் பவல் களமிறங்கினார். தொடர்ந்து 19வது ஓவரில் 2 பவுண்டரி உட்பட 14 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரை வீச ஸ்டார்க் வந்தார். அந்த ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட்டாலும், டெல்லி அணி டீம் ஹாட்ரிக் எடுத்து அசத்தியது. இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது.
இதையும் படிங்க: அடித்து துவைத்த குஜராத் அணி... ராஜஸ்தான் அணிக்கு 210 ரன்கள் இலக்கு; வெற்றி யாருக்கு?