பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண்ணை தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருவர் கூட்டுப்பலாத்காரம் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம் இந்த இரு இளைஞர்களும் அந்த பெண்ணுக்கு அறிமுகமாகி பழகினர். டெல்லியில் ஒரு ஹோட்டலில் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தபோது இந்த கூட்டுப்பலாத்காரம் நடந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண், விடுமுறைக்காக இந்தியாவுக்கு சுற்றுலா வந்து, மகாராஷ்டிரா, கோவாவுக்கு சென்றுள்ளார். இஸ்டாகிராம் மூலம் டெல்லியைச் சேர்ந்த வாசிம், கைலாஷ் ஆகிய இரு நண்பர்கள் அந்த பெண்ணுக்கு பழக்கமாகியுள்ளனர்.

கைலாஷ், வாசிம் இருவரையும் சுற்றுலாவில் தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு அந்த பெண் கூற, ஆனால், அதற்கு இருவரும் மறுத்துவிட்டு அந்த பெண்ணை டெல்லி வருமாறு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த பிரிட்டன் பெண், டெல்லிக்கு நேற்றுமுன்தினம் சென்று அங்குள்ள மஹிபால்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கிருந்தவாறு தனது நண்பர்கள் கைலாஷ், வாசிம் இருவரையும் அந்தப் பெண் அழைத்துள்ளார். அந்த ஹோட்டலுக்கு இரவு சென்ற இருவரும், பிரிட்டன் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து, அவரை கூட்டுப்பலாத்காரம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: வெற்றிகரமாக முடிவடைந்த 2 நாள் பயணம்.. டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி..!

இதையடுத்து, பிரிட்டன் பெண் வசந்த் கஞ்ச் போலீஸ் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கதி குறித்து புகார் தெரிவித்துள்ளார். விதிமுறையின்படி, வசந்த் கஞ்ச் போலீஸார் டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பிரிட்டன் பெண்ணுக்கு தேவையான உதவிகளைச் செய்தனர்.
பிரிட்டன் பெண் அளித்த புகாரையடுத்து,வழக்குப்பதிவு செய்த வசந்த் கஞ்ச் போலீஸார் கைலாஷ், வாசிம் இருவரையும் கைது செய்தனர். இதில் கைலாஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கைலாஷுக்கு சரியாக ஆங்கிலம் பேசத் தெரியாது என்பதால் கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் ஆங்கிலத்தில் அந்தப் பெண்ணுடன் பேசி பழகியதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். அந்த பெண் ஹோட்டலுக்கு சென்றபோது, லிப்டில் இருந்த ஹோட்டல் சுத்தம் செய்யும் பணியாளரும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாரணையில் அந்த பெண் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்தது, அந்தக் கட்சி ஆட்சியில் இருந்தபோதும் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் சம்பவங்களும், குழந்தைகள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன. ஆனாலும், ஆம் ஆத்மி அரசு பெண்களின் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து, நிர்பயா நிதியை கண்காணிப்பு சேவைக்கு அதிகம் பயன்படுத்தியது.
தேர்தலில் வெற்றி பெற்று பாஜக டெல்லியில் ஆட்சியைப் பிடித்து 3 மாதங்கள்கூட ஆகவில்லை, அதற்குள், பிரிட்டன் பெண் ஒருவர் கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகரிலேயே வெளிநாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு பாதுப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது.
இதையும் படிங்க: அப்படி என்ன ஆட்சி செஞ்சி கிழிச்சிட்டீங்க.. மேடையில் வீரவசனம் பேசுறீங்க.. முதல்வர் ஸ்டாலினை இபிஎஸ் கிழி..!