முன்னதாக உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல்கரீம் அல் இசா இன்று ஜெட்டாவில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். ஜம்மு-காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பின் போது 2023 ஜூலையில் டெல்லியில் பொதுச் செயலாளருடன் நடத்திய சந்திப்பை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். சகிப்புத்தன்மை மதிப்புகளை ஊக்குவிப்பதிலும், மிதமான தன்மையை ஆதரிப்பதிலும், சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றுவதிலும் முஸ்லிம் உலக லீக்கின் பங்கை அவர் பாராட்டினார்.

இந்தியாவின் பழமையான தத்துவமான வசுதைவ குடும்பகம் [உலகம் ஒரு குடும்பம்] என்பதை நினைவு கூர்ந்த பிரதமர், பன்முக கலாச்சாரம், பன்முக மொழி, பன்முக இனம் மற்றும் பன்முக மத சமூகமாக இந்தியா, பன்முகத்தன்மையில் ஒற்றுமையைக் கொண்டாடுகிறது என்று குறிப்பிட்டார். இந்தியாவின் நம்பமுடியாத பன்முகத்தன்மை அதன் துடிப்பான சமூகம் மற்றும் அரசியலுக்கு வடிவம் கொடுத்த ஒரு மதிப்புமிக்க பலமாகும். தீவிரவாதம், பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிரான உலக முஸ்லிம் லீக்கின் உறுதியான நிலைப்பாட்டை அவர் பாராட்டினார்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி..! பிரதமர் தலைமையில் கூடியது அமைச்சரவை கூட்டம்..!

சவுதி அரேபியாவுடனான அதன் உறவுகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு உலக முஸ்லிம் லீக் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து உலக முஸ்லிம் லீக் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் நியாயங்களையும் நிராகரித்து கண்டிக்கிறது.

அத்தகைய செயல்களை எந்த மதம் அல்லது கலாச்சாரத்துடனும் தொடர்புபடுத்தும் எந்தவொரு முயற்சியையும் நிராகரித்து, தனது நிலைப்பாட்டையும் முழு இஸ்லாமிய உலகத்தின் நிலைப்பாட்டையும் உலக முஸ்லிம் லீக் உறுதிப்படுத்தியது. இந்த கொடூரமான குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துகொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திகிறோம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
இதையும் படிங்க: நிலைக்குலைய வைத்த தீவிரவாத தாக்குதல்..! கரம் கொடுக்கும் சவுதி அரேபியா..!