ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் ராணுவமும் அதன் தளபதியும் ஏற்கனவே உஷார் நிலையில் உள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்து கூகிளில் தேடத் தொடங்கியுள்ளனர்.
பாகிஸ்தானின் சமூக ஊடக தளங்களில், சில பாகிஸ்தானியர்கள் இந்தியா தாக்கக்கூடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர். அதே நேரத்தில், பலர் கூகிளில் இந்தியப் பிரதமர் மற்றும் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தேடுகிறார்கள். இணையத்தில் உள்ள சில பயனர்கள் பாகிஸ்தானின் கூகிள் தேடலின் ஸ்கிரீன் ஷாட்களையும் பகிர்ந்துள்ளனர். இதில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக செய்யப்பட்ட தேடல் முதலிடத்தில் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானுக்குள் தேடப்பட்ட விஷயங்களில் 'பஹல்கம்' மூன்றாவது இடத்தில் இருப்பதை கூகிள் ட்ரெண்ட்ஸில் காணலாம். இதிலிருந்து, இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் மக்களும் கவலைப்படுகிறார்கள் என்பதை அறியலாம். அங்குள்ள மக்களை விட அங்குள்ள இராணுவமும், ஆட்சியாளர்களும் இந்தப் பிரச்சினையைப் பற்றி பல மடங்கு அதிகமாகக் கவலைப்பட வேண்டும்.
இதையும் படிங்க: பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு: கருப்பு நிறத்தில் வெளியியான காஷ்மீர் செய்தித் தாள்கள்
இது தவிர, இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் பாசித், 'இந்தியாவின் எந்தவொரு தாக்குதலையும் முறியடிக்க பாகிஸ்தான் முழுமையாக தயாராக உள்ளது என்று நான் நம்புகிறேன்' என்று தனது எக்ஸ்தளப்பதிவில் பகிர்ந்துள்ளார். பஹல்காமில் நடந்த இந்தத் தாக்குதலை 4 பயங்கரவாதிகள் நடத்தியதாகவும், அவர்களில் 2 பேர் பாகிஸ்தானியர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலின் தாக்கம் பாகிஸ்தான் சமூக ஊடகங்களிலும் தெளிவாகத் தெரிகிறது. அங்கு #PahalgamTerroristAttack முதல் #Modi வரையிலான ஹேஷ்டேக்குகள் பெரிதும் ட்ரெண்டிங்கில் உள்ளன. பிரதமர் மோடி பாகிஸ்தான் மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சத்தை பல பாகிஸ்தானிய மக்கள் தங்கள் பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.
காஷ்மீர், மோடி, புல்வாமா, ஜம்மு போன்ற முக்கிய வார்த்தைகளும் பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய சூழ்நிலையை பிரதிபலிக்கிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பிறகு இப்போது பாகிஸ்தானும் எச்சரிக்கையாக உள்ளது.

தற்போது, 'பஹல்காம் தாக்குதல், காஷ்மீர் ,காஷ்மீர் தாக்குதல், இந்தியா, பஹல்காம் தாக்குதல் புதுப்பிப்பு, இந்தியா தாக்குதல், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், பஹல்காம் சம்பவம் இந்தியா செய்திகள், இன்று பஹல்காமில் என்ன நடந்தது? பஹல்காம் காஷ்மீர், பாகிஸ்தான் இராணுவத்துடன் தொடர்பு' போன்ற முக்கிய வார்த்தைகள் பாகிஸ்தானில் தேடப்படுகின்றன.
இதையும் படிங்க: பாகிஸ்தானின் 7 பலவீனம்... இந்தியா திருப்பியடிக்க வேண்டிய சரியான தருணம்..!