மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநில மாநாடு விழுப்புரத்தில் தொடங்கியது இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மாநாட்டு பேரணி பின்னர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய தலைவர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது சுயதன்மையிலிருந்து திமுகவுடன் கூட்டணி கட்சியாக ஆளுங்கட்சியின் அனைத்து விவகாரங்களிலும் முட்டுக்கொடுத்து வருவதாக தொடர்ந்து பலராலும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
மற்ற கூட்டணி கட்சிகளை விட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தனித்தன்மை உண்டு அவர்கள் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் தொகுதி பங்கீடு என்ற அடிப்படையில் மட்டுமே கூட்டணி வைத்துக் கொள்வார்கள். தேர்தல் முடிந்தவுடன் சில மாதங்களிலேயே வெளியே வந்து விடுவார்கள். பின்னர் தனியாக மக்கள் பிரச்சனைகளுக்காக சட்டமன்றத்திலும் பொது வெளியிலும் போராடுவார்கள். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தனித்தன்மை என்று சொல்லலாம்.
இதனால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு வரவேற்பும் மரியாதையும் இருந்து வந்துள்ளது. ஆனால் 2017 க்கு பிறகு மக்கள் நல கூட்டணி தோல்விக்கு பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கே. பாலகிருஷ்ணன் தலைமையில் வந்த பிறகு மிக மோசமான நிலையை கையில் எடுத்து. பொதுவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தொழிலாளி வர்க்கத்திலிருந்து வருவார்கள். கடந்த 10, 20 ஆண்டுகளாக இந்த நிலையும் மாறி மத்திய தர வர்க்கத்திலிருந்து தலைவர்கள் தலைமைக்கு வந்ததால் அதன் அடிப்படை புரட்சிகர தன்மை இல்லாமல் போன நிலையில் கட்சியின் அடிப்படை தன்மைகளும் மாறத் தொடங்கியது.

இது பல இடங்களில் வெளிப்பட்டது அதன் ஒரு பகுதி தான் 2018 பிறகு திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டாக களம் காண ஆரம்பித்து 2019-ல் 6 தொகுதிகளை பெற்று சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொகுதி பங்கீடு என்கிற வழக்கமான நிலையை கைவிட்டு கூட்டணி கட்சியாக மாறிப்போனது. தற்போது 2024 மக்களவைத் தேர்தல் வரை இந்த கூட்டணி தொடர்ந்தது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை கொள்கையான மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் திமுக அரசுக்கு முட்டுக் கொடுக்கும் வேலையை தொடர்ந்து செய்து வந்ததால் கடும் எதிர்ப்பை கட்சிக்குள்ளும், வெளியிலும் சம்பாதித்து வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை அமைப்புகளான ஜனநாயக வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், சிஐடியு, மாதர் சங்கம் போன்றவை அதன் சுய தன்மையை இழந்து வருவதை தோழர்கள் சுட்டி காண்பிக்க ஆரம்பித்தனர்.
இதையும் படிங்க: தொட்டியில் விழுந்து சாகவில்லை.. எப்படி வகுப்பறையை விட்டு வெளியே வந்தது? ..குழந்தை மரணத்தால் கதறும் பெற்றோர் !
பல இடங்களில் சிஐடியு, வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டங்களை கட்சி தலைமையே தடுத்து நிறுத்தியதால் தோழர்கள் கொதிப்பில் இருந்தனர். இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவின் இடதுசாரி அணி என்று அழைக்கும் அளவிற்கு கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. பொதுவாக மற்ற முதலாளித்து கட்சிகள் இது பற்றி கவலைப்படாது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது கே.பாலகிருஷ்ணன் காலத்தில் முற்றிலும் உடைக்கப்பட்டு மற்ற முதலாளித்துவ கட்சிகள் போல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே விமர்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போல் நிலைப்பாடு மாறியதால் தொடர்ந்து அது தன்னுடைய ஆதரவை மக்களிடம் இழந்து வந்தது.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாடு விழுப்புரத்தில் தொடங்கியது வழக்கம்போல் பாஜக எதிர்ப்பு, மத்திய அரசு எதிர்ப்பு என்று தீர்மானங்கள் போட்ட நிலையில் பேருக்கு சாம்சங் போராட்டம் தமிழக அரசு நிறுவனத்துக்கு ஆதரவாக இருப்பதாக குற்றச்சாட்டையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பதையும் லேசாக சுட்டிக்காட்டி தீர்மானங்கள் போடப்பட்டிருந்தன. மாநாட்டில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் மேற்சொன்ன விஷயங்களை தனது பேச்சில் ஒப்புக்கொண்டார்.
மாநாட்டில் தொடர்ந்து பேசிய கே பாலகிருஷ்ணன் காவல்துறை சட்டம் ஒழுங்கை பேணி காப்பதை மீறி எதிர்க்கட்சிகள் போராட்டத்தை கடுமையாக அடக்குவதும், வழக்குகள் பதிவதும் என செயல்பட்டு வருகிறது இது இன்னொரு அவசரநிலை தமிழகத்தில் இருக்கிறதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுகிறது என்று நேரடியாக குற்றம் சாட்டினார். இதுவரை வாய்மூடி மாநில அரசுக்கு முட்டுக் கொடுத்து வந்த பாலகிருஷ்ணன் மாநாட்டிலும் அவ்வாறு பேசினால், எங்கே சிக்கல் வந்து விடுமோ என்கிற எண்ணத்தில் லேசாக விமர்சனத்தை வைத்ததாக அங்கேயே விமர்சனம் வந்தது.
எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து கூட்டணியில் நாம் இருக்கிறோம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். நேற்று வந்த பாரதிய ஜனதா கூட நல்ல வாக்கு சதவீதத்துடன் முன்னேறும் பொழுது அதை தடுக்கும் கடமை நமக்கு உள்ளது என்று அவர் குற்றம் சாட்டி அதை தடுக்கும் இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட வேண்டும் என்று பேசினார். அவருடைய பேச்சுக்கு பிறகு பிரதிநிதிகள் தங்கள் வாதங்களை வைக்க அழைக்கப்பட்டனர் மாநில பிரதிநிதிகள்

மாநில பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் தலைமைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தனர். பாஜக வளர்ந்து விட்டது, நாம் தமிழர் கட்சி வளர்ந்து விட்டது ஆனால் நமது கட்சி இன்னும் அப்படியே இருக்கிறது இதற்கு காரணம் நம்முடைய அடிப்படை போராட்ட குணத்தை கைவிட்டு ஆளுகின்ற அரசுக்கு துதிபாடிகளாக நாம் மாறிவிட்டோம் இதனால் நம் சுயத்தன்மையிலிருந்து விலகி விட்டோம். மக்களிடையே ஆதரவு குறைந்து வாக்கு சதவீதம் குறைந்து போய்விட்டது என்று குற்றம் சாட்டினர். நாம் நமது தனித்தன்மையுடன் அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராடாமல் ஆளுகின்ற அரசை தொடர்ந்து ஆதரித்து வந்ததே இந்த நிலைமைக்கு காரணம் என்று பலரும் கடுமையாக சாடினர்.
இது அகில இந்திய தலைவர்களுக்கும், மாநில தலைமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளும் பிரதிநிதிகள் விவாதம் தொடரவுள்ள நிலையில் இன்னும் கடுமையான விவாதங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக பார்முலாவை கையில் எடுக்கும் தவெக... தயாராகும் மா.செ. பட்டியல்...!