அமெரிக்க மருத்துவ கல்லூரியில் படித்து வரும் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் திடீரென்று மாயமாகி விட்டார். வசந்த விடுமுறைக்காக தோழிகளுடன் கடற்கரை ரிசார்ட் விருந்துக்கு சென்ற அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று, மாணவியின் தந்தை புகார் கூறியிருக்கிறார்.

20 வயதான அந்த மாணவியின் பெயர் சுதிக்ஷா கோணங்கி. அமெரிக்காவின் பீட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவி. இவர் தோழிகளுடன் டொமினிக்கன் குடியரசில் உள்ள கடற்கரை சுற்றுலா தளத்திற்கு வசந்த விடுமுறையை கொண்டாட தோழிகளுடன் சென்றிருந்தார். புந்தா கானாவில் இருக்கும் ரியூ ரிபப்ளிக்கா ஹோட்டலின் கடற்கரைக்கு தோழிகளுடன் சென்றபோது அவரை கடைசியாக பார்த்திருக்கிறார்கள். அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
இதையும் படிங்க: சிங்கப்பூர் சென்றாலும் இப்படியா? கணவருடன் தூங்கிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. இந்தியருக்கு 7 மாதம் ஜெயில்..!

சமூக ஊடக பதிவு ஒன்றில் டொமினிகன் குடியரசில் உள்ள இந்திய தூதரகம் கோணங்கியின் பெற்றோருடன் தொடர்பில் இருப்பதாகவும் காணாமல் போன மாணவியை கண்டுபிடிப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் அறிவித்திருந்தது.
இதற்கிடையில் கோணங்கி வசிக்கும் வர்ஜீனியாவின் லவ் டவுன் கவுண்டரில் உள்ள ஷெரிப் அலுவலகம் மாணவி சுதிக்ஷா பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஐந்து பெண் தோழிகளுடன் கடற்கரை சுற்றுலா தளத்தில் இருப்பதாக கூறியது.

நியூ ரிபப்ளிக்கா ஹோட்டல் அதிகாரிகள் கூறும்போது அந்த பெண்ணின் தோழிகள் மார்ச் 6ஆம் தேதி மாலை நாலு மணி அளவில் அவர் காணாமல் போய்விட்டதாக புகார் செய்தனர் மேலும் அவர் கடைசியாக 12 மணி நேரத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி வரை அவரைப் பார்த்ததாக தோழிகள் தெரிவித்தனர்.
தந்தை கோடங்கி இது பற்றி கூறும் போது தனது மகள் மார்ச் ஆறாம் தேதி அதிகாலை 4 மணி அளவில் தனது தோழிகள் மற்றும் ரிசார்ட்டில் சந்தித்த சில ஆண்களுடன் கடற்கரை விருந்துக்கு சென்றதாக சிஎன்என் செய்தியாளரிடம் கூறியிருந்தார்.

சிறிது நேரத்திற்கு பின் அவருடைய தோழிகள் அனைவரும் திரும்பி வந்து விட்டார்கள். ஆனால் அவருடைய மகள் திரும்பி வரவில்லை. இதுவரை டொமினிக்கன் குடியரசில் பல அதிகாரிகள் தண்ணீரில் தேடிப் பார்த்தனர். ஹெலிகாப்டர் மற்றும் பிற கருவிகளை பயன்படுத்தியும் அவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். விரிகுடா மற்றும் புதர்கள் மரங்கள் அருகேயும் தீவிரமாக அவர்கள் தேடி பார்த்தனர் என்று கூறியிருந்தார்.

அவர் மேலும் கூறுகையில் தனது மகளை தண்ணீரில் அல்லது ரிசார்ட்டில் மற்றும் அதை சுற்றி தேடுவதற்கு பதிலாக அதிகாரிகள் கடத்தல் மற்றும் மனித கடத்தல் உள்ளிட்ட பிறகு சாத்திய கூறுகளையும் ஆராய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு இடையில் உட்ஸ்பெர்க் பல்கலைக்கழக அதிகாரிகள் சுதிஷா கோணங்கியின் குடும்பத்தினருடனும் பஜினியாவின் லவ் டவுன் கவுண்டில் உள்ள அதிகாரிகளுடனும் தொடர்பு இருப்பதாகவும் அவரை கண்டுபிடித்து பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டு வருவதற்கான அவர்களின் முயற்சிகளுக்கு எங்களுடைய முழு ஆதரவையும் வழங்கி உள்ளோம் என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்.. இலங்கைக்கு கடத்த முயற்சி..!