திருவண்ணாமலையில் கல்யாணம் ஆகி 7 மாசத்துல என் மகன் தற்கொலை பண்ணிக்கிட்டான் , அவன் சாவில் மர்மம் இருக்கிறது என தாய் ஒருவர் கதறி இருக்கிறார்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் ரவி , இவரது மகன் விஜய்க்கும் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணுக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது
சுகன்யா காவலராக செங்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் பால் வியாபாரம் செய்து வரும் விஜய் மனைவி தினமும் காவல் நிலையம் சென்று வருவதை விரும்பவில்லை என்று தெரிகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது நீ வேலைக்கு சென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என விஜய் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது இருப்பினும் கணவனின் பேச்சை மீறி சுகன்யா வேலைக்கு சென்றுள்ளார் இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுகன்யா கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது விஜய் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்
இதையும் படிங்க: 11 நாட்கள் தீப ஜோதி நிறைவு..2668 அடி உயர மலையில் இருந்து இறங்கிய மகாதீப கொப்பரை!
இது குறித்து தகவல் அறிந்து வந்த செங்கம் போலீசார் விஜயின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இதனிடையே எனது மகனின் சாவுக்கு காரணம் சுகன்யா தான் என்றும் என் மகன் தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அளவிற்கு கோழை இல்லை என்றும் சாவில் மர்மம் உள்ளதாகவும் விஜயின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்
திருமணம் ஆகி 7 மாதத்திற்குள் பெண் போலீசின் கணவர் தூக்கு மாட்டிக் கொண்டு இருந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
இதையும் படிங்க: காரணம் சொல்லி சொல்லி ..சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை