பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ள நிலையில் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு உள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சூரத் கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வானத்தில் உள்ள இலக்கை ஏவுகணை வெற்றிகரமாகவும் துல்லியமாகவும் தாக்கி அழித்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை விமானம் மற்றும் தரையில் இருந்து கப்பலை தாக்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
இதையும் படிங்க: இந்தியாவின் பதிலடி.. ஐசோலேஷனில் பாகிஸ்தான்.. எச்சரிக்கும் வல்லுநர்..!

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ள நிலையில், இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதும் பாகிஸ்தான், ஏவுகணை சோதனைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய கடற்படை நடத்தி உள்ள இந்த சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: சோலியை முடித்த இந்தியா.. பாக்., பிரதமரின் அவரசக்கூட்டம்: பிடறியில் அடிக்க ஓடிவரும் முனீர்..!