சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதியை வெள்ளையடித்து சுத்தம் செய்யக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவில் சம்பல் மசூதி சர்ச்சைக்குரிய கட்டமைப்பு என்த் திருத்தியது.சர்ச்சைக்குரிய கட்டமைப்பு என இந்து தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையின் பேரில் உத்தரவில் எழுதப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டம்- ஒழுங்கு நிலைமையை மாநில அரசு பராமரித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணையின் போது, வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின், மசூதியை 'சர்ச்சைக்குரிய கட்டமைப்பு' என்று குறிப்பிடுமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால், ஸ்டெனோவிடம் கூறி 'சர்ச்சைக்குரிய கட்டமைப்பு' என்ற வார்த்தைகளை சேர்க்க உத்தரவிட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றம் வரும் மார்ச் 10 ஆம் தேதி மசூதி குழுவின் மனுவை விசாரிக்கும்.
இதையும் படிங்க: கஞ்சா கடத்தி வர நூதன ப்ளான்.. ரயில், பஸ், கார் என திட்டமிட்ட கும்பல்.. போலீசை திணறடிக்க சதி திட்டம்..!
விசாரணையின் போது, மசூதி குழு , இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் அறிக்கைக்கு தனது ஆட்சேபனையை தெரிவித்தது. மசூதி குழுவின் ஆட்சேபனைக்கு பதில் தாக்கல் செய்ய இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அவகாசம் கோரியது, அதன் பிறகு நீதிமன்றம் பதில் தாக்கல் செய்ய இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்திற்கு அவகாசம் அளித்தது. மசூதியை சுத்தம் செய்யும் பணி தொடங்கிவிட்டதாக மசூதி குழு கூறுகிறது. ஆனால் தொழுகைக்காக வெள்ளையடிப்பதையும் அனுமதிக்க வேண்டும். இது தவிர, மசூதி குழு உயர் நீதிமன்றத்தை இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் அறிக்கையை நிராகரிக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் தான் உரிமையாளர் அல்ல, பாதுகாவலர் என்று தனது தரப்பு விளக்கத்தை கூறியுள்ளது.

மசூதியில் வெள்ளையடிப்பதற்கான தேவையை நாங்கள் காணவில்லை என்று இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் வழக்கறிஞர் கூறினார். கடந்த விசாரணையில், இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் தனது அறிக்கையில் வெள்ளையடிக்க வேண்டிய அவசியமில்லை, சுத்தம் செய்யலாம் என்று கூறியிருந்தது. இந்திய தொல்பொருள் ஆய்வு மைய அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க மசூதி குழுவிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
சம்பலின் ஜமா மசூதி நிர்வாகக் குழு ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு சம்பலின் ஜமா மசூதியை வெள்ளையடித்து சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஷாஹி ஜமா மசூதி தொடர்பான சர்ச்சை, வரலாற்று சிறப்புமிக்க ஹரிஹர் கோயிலின் மீது மசூதி கட்டப்பட்டது என்ற சர்ச்சையை ஏற்படுத்தியது. நவம்பர் 24, 2024 அன்று மசூதியை ஆய்வு செய்ய நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்தன. இந்த வன்முறை மோதல்களால் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் வழக்கைச் சுற்றியுள்ள சட்ட மற்றும் வகுப்புவாத சிக்கல்களை மேலும் ஆழப்படுத்தியது. இது சட்ட பார்வையாளர்கள் மற்றும் உள்ளூர் இந்து -இஸ்மால் மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தியது.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட முந்தைய உத்தரவில், மசூதி வளாகத்தை சுத்தம் செய்ய நீதிமன்றம் இந்திய தொல்பொருள் ஆய்வு மையதுக்கு உத்தரவிட்டது, ஆனால் ரம்ஜானுக்கு முன் வெள்ளையடிப்பதை அனுமதிக்கவில்லை. மசூதியை ஆய்வு செய்து அதன் நிலை குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க மூன்று பேர் கொண்ட இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: என்.எல்.சி சுரங்கத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு..!