பாகிஸ்தான் அணு ஆயுத நாடு ஆகும். எனவே, பயப்பட வேண்டியதில்லை என்று பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் மிரட்டல் பேச்சு பேசியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்.22இல் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 27 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து தீவிரவாதிகளுக்கு அடைக்கலமும் ஆதரவும் கொடுத்து வரும் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தான் உடனான தூதரக சேவைகள் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இதே போல் பாகிஸ்தான் அரசும் சிம்லா ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவின் எதிர் நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அரசில் பதவியில் இருப்பவர்களும் அரசியல்வாதிகளும் தினமும் ஏதாவது பினாத்தல் பேச்சுகளை பேசி வருகின்றனர். அந்த வகையில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் ஆகியோர் பேசியிருக்கின்றனர். கவாஜா ஆசிப் கூறுகையில், "இந்தியா – பாகிஸ்தான் இடையே முழு அளவிலான போர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இரு நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்திருப்பதால், உலக நாடுகள் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் குறித்து கவலைப்பட வேண்டும்.’ என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: இனி ஐசிசி தொடர்களில்கூட இந்தியா - பாகிஸ்தான் விளையாட கூடாது.. சவுரவ் கங்குலி கடும் ஆட்சேபம்.!!

அதேபோல் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசும்போது, "‘பாகிஸ்தான் அணு ஆயுத நாடு ஆகும். எனவே, பயப்படவேண்டியதில்லை. இந்தியாவின் எந்த நடவடிக்கைக்கும் பதிலடி கொடுப்போம். பஹல்காமில் நடந்த தாக்குலை கண்டிக்கிறோம். அதேநேரம் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்த தொடர்பும் இல்லை" என்று இஷாக் தார் மறுத்தார்.
இதையும் படிங்க: விடவே கூடாது.. கனவிலும் நினைத்து பார்க்காத தண்டனை.. தீவிரவாத தாக்குதலுக்கு ரஜினி ஆவேசம்.!