திமுக தலைமையிலான திமுக கூட்டணி அரசு தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு ஆண்டு எஞ்சியிருக்கிறது. அதற்குள் தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக, பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. தமிழக பாஜகவின் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில தலைவர் மாற்றத்துக்கு பிறகு அண்ணாமலை பல்வேறு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, கடந்த 14 ஆம் தேதி ஆன்மிக பயணமாக அண்ணாமலை இமயமலை சென்றார். இமயமலையில் ஸ்ரீ ஸ்ரீ மகாவதார் பாபாஜி குகையில் தியானம் செய்தார். 3 நாள் ஆன்மிக பயணத்துக்கு பிறகு மீண்டும் சென்னை திரும்பினார். பின்னர், கட்சியின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர், கடந்த 23 ஆம் தேதி அமெரிக்கா சென்றார்.
இதையும் படிங்க: இரு அமைச்சர்கள் நீக்கம்.. 2026இல் திமுக ஆட்சி அகற்றத்துக்கான தொடக்கப்புள்ளி.. அண்ணாமலை சரவெடி.!

அமெரிக்காவில், கலிபோர்னியா மாகானத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், ‘ஸ்டான்போர்ட் இந்தியா மாநாடு 2025’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பங்கேற்று கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உயர் நிர்வாகிகளுடன் முக்கியமான கலந்துரையாடல் நடத்தியுள்ளார். அதைத்தொடர்ந்து நேற்று அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில், இந்தியா கொள்கை மற்றும் பொருளாதார ஆராய்ச்சி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடி உள்ளார்.

இந்த கலந்துரையாடலில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் கொள்கை மாற்றங்கள் குறித்த மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அண்ணாமலை விளக்கமாக பதில் அளித்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ஸ்ரீ புத்திகே ஆலயத்தில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். மேலும் அந்த கோவிலில் பிரதமர் மோடி பெயரில் அர்ச்சனையும் செய்தார். இதுத்தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ சீட்டே வேண்டாம்... குழிபறிக்கும் அதிமுக... அக்கட தேசத்தை நம்பும் அண்ணாமலை..!