மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் அறிவுறுத்தலின்படி துரை வைகோ தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற்றார். கூட்டம் நிறைவு பெற்றத்தை அடுத்து வைகோ, துரை வைகோ, மல்லை சத்யா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய துரை வைகோ, இயக்க நலன், இயக்க தந்தை நலன் அதுதான் முக்கியம். அதைத் தாண்டி இயக்கம் கட்டுக்கோப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக போராடுகிற இயக்கம் மறுமலர்ச்சி இயக்கம்., இந்த பயணம் சீரும் சிறப்புமாக தொடர வேண்டும் என்பதற்காக பேசியதாக தெரிவித்தார்.

இனிமேல் இந்த இயக்கத்திற்கும், தலைவருக்கும், எனக்கும் உறுதுணையாக இருப்பேன் என மல்லை சத்யா வாக்கு கொடுத்ததன் அடிப்படையில், இதனை ஏற்றுக்கொண்டு மீண்டும் முதன்மை செயலாளர் ஆக தொடர்வதாக முடிவெடுத்துள்ளேன் என கூறினார். இந்த இயக்கத்திற்கும், இயக்க கடமைக்கும் உழைப்பவர்கள், பாடுபடுபவர்கள் அனைவரையும் தலைமேல் வைத்து கொண்டாடுவேன், மல்லை சத்யாவின் அரசியல் வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பேன் என கூறினார். இனிமேல் நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்று துரை வைகோ தெரிவித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: ராஜினாமாவை திரும்ப பெற்றார் துரை வைகோ..! தந்தையின் ஆணைக்கு கட்டுப்பட்ட மகன்..!
அவரைத் தொடர்ந்து பேசிய பொதுச் செயலாளர் மல்லை சத்யா, என் அரசியல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கும் அன்பு தலைவர் வைகோ சொன்னது தான் இங்கு நடந்தது என்றும் கழகத்துடைய முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் துரை வைகோ பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். என்னுடைய நடவடிக்கைகள் அவரை காயப்படுத்தி இருக்குமேயானால் நான் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்., தொடர்ந்து இயக்கத்தை முன்னெடுத்து செல்கின்ற முதன்மைச் செயலாளர் பதவியில் தொடர வேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை சொல்லிக் கொள்கிறேன் என கூறினார்.
இதையும் படிங்க: ராஜினாமாவை திரும்ப பெறுகிறார் துரை வைகோ.. சமாதனம் ஆனதன் ரகசியம் இதுதான்..!