காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். உலகையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தை அடுத்து ஜம்மு- காஷ்மீர் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.

பாகிஸ்தான் மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்த வேண்டுமென நாடு முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதனிடையே பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கும் இடையே தற்பொழுது ஒரு வகையான மோதல் போக்கு உருவாகக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு ஒன்று இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டின் மீது பல்வேறு தடை உத்தரவுகளை பிறப்பிக்க இந்தியா தயாராகி வருகிறது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: அமெரிக்க பயணத்தை பாதியிலேயே முடித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி..!

இதனிடையே, பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் கண்டம் விட்ட கண்டம் தாவும் ஏவுகனை சோதனை நடத்த ஆயுத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 24, 25 என இரண்டு நாட்களும் ஏவுகனை சோதனை நடத்த பாகிஸ்தான் ராணுவம் ஆயுத்தமாகிறது. இந்தியாவுடன் பதற்றமான சூழல் நிலவி வரும் இந்த ஒரு நிலையில் பாகிஸ்தான் ஏவுகனை சோதனைக்கு தயாராகிறது.

குறிப்பாக பாகிஸ்தானில் இருக்கக்கூடிய பயங்கரவாதிகளின் இடங்கள் மீது இந்திய அரசு அதிரடி தாக்குதல்களை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எங்கெங்கெல்லாம் இருந்து அந்த தீவிரவாத குழுக்கள் இயங்குகின்றார்கள் என்ற விவரம் இந்தியாவிற்கு தெரியும். கடந்த காலங்களில் இதே போன்று ஊடுருவி சென்று தாக்கக்கூடிய நடவடிக்கைகளையும் இந்திய அரசு துணிச்சலாக மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் தான் தற்பொழுது பாகிஸ்தான் நாடு தன்னை தற்காத்துக் கொள்ளக்கூடிய விதமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தற்பொழுது கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய சில ஏவுகணைகளை சோதனை செய்ய உள்ளதாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இன்றும் நாளையும் கராச்சி அருகே கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய வகையிலான ஏவுகணைகளை சோதனை செய்வதற்கு பாகிஸ்தான் தயாராகி வருவதாக இந்திய உளவுத்துறையிடமிருந்து தகவல் கிடைத்திருக்கின்றது. பதற்றமான சூழல் நிலவி வரக்கூடிய சூழ்நிலையில் இந்திய பகுதிகளை குறி பார்க்கக்கூடிய விதமாக பாகிஸ்தானிடம் சில ஏவுகணைகள் இருக்கின்றன. அதுபோன்ற ஏவுகனைகளை தற்போது தயார் நிலையில் வைத்துக் கொள்வதற்காக பாகிஸ்தான் தங்கள் தரப்பிலிருந்து இந்த சோதனைக்கு தயாராகி வருவதாக தெரிகிறது.

பஹல்காம் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா விரைவுபடுத்த கூடும் என்ற ஒரு அச்சத்தின் காரணமாக பாகிஸ்தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. பாகிஸ்தானை பொறுத்தவரை உலகில் இருக்கக்கூடிய இஸ்லாமிய நாடுகளில் அணு ஆயுத வல்லமை கொண்ட ஒரு நாடாக உள்ளது.
ஈரான் உள்ளிட்ட நாடுகள் எல்லாம் இப்போதுதான் அணு ஆயுதங்களை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றார்கள். அதற்கான சோதனையில் ஈடுபடுகின்றார்கள். ஆனால் பாகிஸ்தானை பொறுத்தவரை 1960 முதலே அந்த அணு ஆயுதங்கள் தொடர்பான ஆய்வுகளை எல்லாம் மேற்கொண்டு வந்தார்கள். அந்த அடிப்படையில் அந்த ஏவுகனைகளை தற்போது சோதனை செய்வதற்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆக்ஷனில் இறங்கிய இந்தியா.. அரண்டு போன பாகிஸ்தான்.. வெளியானது அதிரடி உத்தரவு..!