மாமல்லபுத்திரம் அருகே உள்ள திருவிடந்தையில் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, ராமதாஸ் வழிகாட்டுதல் படி சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது என்று கூறினார். அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவே சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான யோசனைகள் மாநாட்டின் மூலம் வழங்கப்படும் என அன்புமணி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வடமாவட்டங்களில் தொழிற்சாலைகள் வேலைவாய்ப்புகள் அதிகம் கிடையாது என்றும் தமிழ்நாட்டில் மது, போதை ஒழிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: நெருங்கும் சித்திரை முழு நிலவு மாநாடு; ராமதாஸ் - அன்புமணி மோதல் சரியாகிவிட்டதா? ஜிகே மணி சொல்வது என்ன?
இதையும் படிங்க: “அரசியல் அரைவேக்காடு” திலகபாமா கட்சியை விட்டு வெளியேற வேண்டும்... பாமக பொதுச்செயலாளர் அதிரடி...!