கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர்.

மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், அங்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால், தமிழ் பட வாய்ப்புகளை தேட துவங்கினார்.
இதையும் படிங்க: பழைய ஃபாமுக்கு வந்த யாஷிகா! பாவாடை தாவணியில் கூட இப்படியா? ஏங்கி போன இளம் நெஞ்சங்கள்!

தமிழில், சில நிராகரிப்பை சந்தித்த நயன்தாராவுக்கு ஒருவழியாக, சரத்குமாருக்கு ஜோடியாக 'ஐயா' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் படத்திலேயே பெரிய நடிகர்... பெரிய பேனர் என ஓப்பனிங்கிலேயே ஹிட் படத்தில் நடித்து அசத்தினார்.

இதை தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார்.

ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்காக திரைப்படங்களில் நடித்தாலும், அடுத்தடுத்து கவர்ச்சிக்கு தாவினார்.

குறிப்பாக வல்லவன் படத்தில் சிம்புவுடன் இவர் சேர்ந்து செய்த ரொமான்டிக் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை.

சிம்புவுடன் நடித்த நெருக்கமான காட்சிகள், நிஜத்திலும் இவர்களை நெருக்கமான காதலர்களாக மாற்றியது.

இருவரும் வெளிநாடுவரை சென்று டேட்டிங் செய்த நிலையில், இந்த புகைப்படங்கள் லீக்காகி இருவரின் காதலுக்கு எண்டு கார்டு போட்டது.

இதை தொடர்ந்து வில்லு படத்தில் பிரபு தேவா இயக்கத்தில் நடிக்கும் போது நயன்தாரா - பிரபுதேவாவின் காதல் வலையில் வீழ்ந்தார்.

ஏற்கனவே பிரபுதேவாவுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில், இவர்களின் காதல் பிரபுதேவாவின் விவாகரத்துக்கு காரணமாக மாறியது.

இருவரும் ரோமியோ - ஜூலியட் ரேஞ்சுக்கு காதலித்த நிலையில், பின்னர் அதே வேகத்தில் பிரேக்கப் செய்து பிறந்தனர்.

இதை தொடர்ந்து தான், நானும் ரவுடி தான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க துவங்கினார் நயன்தாரா.

இவருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் சரகேசி முறையில் இரட்டை குழந்தைகளையும் பெற்றெடுத்தனர்.

தற்போது தங்களுடைய இரட்டை குழந்தைகளுடன் நயன் - விக்கி ஜோடி பாரிசுக்கு சென்று விடுமுறை நாட்களை என்ஜாய் செய்து வரும் நிலையில் இதுகுறித்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நாளுக்கு நாள் முற்றும் நெருக்கடி... பிளவராகவே மாறிய ஃபயர்... இழப்பீட்டை ரூ.2 கோடியாய் உயர்த்திய அல்லு அர்ஜூன்..!