மதுரை கே.கே.நகரில் தனியார் மழலையர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வந்த 4 வயது குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளது. ஆழமான தண்ணீர் தொட்டியில் ஆருத்ரா என்ற சிறுமி விழுந்த நிலையில், 30 நிமிடத்திற்கு மேலாக தத்தளித்து போராடி உள்ளார்.

குழந்தை விழுந்தது தெரியாமல் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இருந்துள்ளனர். பிறகு மீட்பு படையினர் உதவியுடன் உயிருக்கு போராடிய நிலையில் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, மழலையர் பள்ளியின் உரிமையாளர் மற்றும் 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்.. மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு..!

இதையும் படிங்க: நியோ மேக்ஸ் மோசடி வழக்கு..! ரூ.600 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி..!