அதாவது சண்முகம் தனது அம்மாவாக நினைக்கும் மரத்தின் அருகே வந்து நின்று பரணியோட மனச நான் புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டேன் என வருத்தப்பட்டு கண் கலங்குகிறான். இதுவரைக்கும் அவளுக்கு நான் எதுவும் செஞ்சது கிடையாது அவ ஆசைப்படுற மாதிரி வெளிநாடு அனுப்பி வைக்க போறேன் அவளுக்காக நான் உறுதுணையா இருக்க போறேன் என்று முடிவெடுக்கிறான். அதுவரைக்கும் அவளை நல்லபடியா பார்த்துக்க போறேன் என சபதம் எடுக்கிறான்.
இதையடுத்து ஸ்கூலுக்கு வரும் பரணி அறிவழகனிடம் ரத்னா கல்யாணம் குறித்து பேசுகிறாள். கனி தனது தோழிகளிடம் இது பற்றி பேச அதை கேட்ட டீச்சர் ரெண்டு பேர் நேராக ரத்னாவிடம் சென்று என்ன மேடம் உங்களுக்கு கல்யாணமா என்ற கேள்வி கேட்க, ரத்னா உங்களுக்கு யார் சொன்னது என கோபப்படுகிறாள்.

கனி தான் சொன்னதாக சொல்ல ரத்னா கனியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து பரணியிடம் எதுக்கு என் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயத்துல தலையிடுற என கோபப்படுகிறாள். முதன்முறையாக சண்முகம் தனது தங்கைகளுக்கு முன்பாகவே பரணிக்கு சப்போர்ட் செய்து பேசுகிறான்.
இதையும் படிங்க: Anna Serial: ஷண்முகம் வீட்டில் இருந்து கண்ணீரோடு வெளியேறும் பாக்கியம் - என்ன நடந்தது?
அதாவது அவ என்ன தப்பு பண்ணிட்டா? அதான் உனக்கு விவாகரத்துக்கு அப்ளை பண்ணியாச்சுல.. உன் வாழ்க்கைக்கு ஒரு துணை வேண்டும் என்று தான் இப்படி பண்ணியிருக்கா.. அதுவும் உனக்காக காத்துட்டு இருக்கும் ஒருத்தனை தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவெடுத்திருக்கா என்று பேசுகிறான்.
சண்முகம் பேசுவதை கேட்ட பரணி ஆச்சரியத்தில் உறைந்து போய் நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
இதையும் படிங்க: Anna Serial: சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பும் இசக்கி! கொந்தளித்த வீரா - அண்ணா சீரியல் அப்டேட் !