காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர்.
இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது. இந்தியாவுடனான அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பிரபலம் ஒருவர் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரிஷ்டி ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் விகாஸ் திவ்யகீர்த்தி பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் திவ்யகீர்த்தி பேசுகையில், பாகிஸ்தான் மீது பலரும் கோபமாக இருக்கின்றனர்.
பலருக்கும் ரத்தம் கொதிக்கிறது. இதனால் தான் இந்த சம்பவம் பற்றி பேச தயாராகி உள்ளேன். பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக உள்ள பலூசிஸ்தான் மற்றும் சிந்து ஆகியவற்றில் பிரச்சனைகள் உள்ளது. பலூசிஸ்தானில் பதற்றமாக சூழல் ஏற்பட்டு வருகிறது. விரைவில் அது பாகிஸ்தானில் இருந்து பிரிய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: 2வது முறையாக நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை.. என்ன முடிவுகள் எடுக்கப்படலாம்?

அதேபோல் சிந்து மாகாணம் பிரிவது காலம் தாமதமானாலும் கூட அதுபற்றி எந்த நேரத்திலும் புதிய செய்திகள் வரலாம். (பலூசிஸ்தான் மற்றும் சிந்து மாகாண மக்கள் தனி நாடு கேட்டு போராடி வருவதை குறிப்பிடுகிறார்).இதனால் பொதுவாக கடினமான சமயங்களில் உணர்ச்சிப்பூர்வமாக கோபத்தில் முடிவெடுக்க கூடாது. சிந்தித்து செயல்பட வேண்டும். அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் நிலைமை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த நாட்டின் நிலைமையை யாரும் மறைக்கவில்லை. பாகிஸ்தானில் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. பொதுமக்கள் பசியால் துடித்து இறந்து கொண்டிருக்கிறார்கள். உள்நாட்டு போர் போன்ற நிலை அங்கு நிலவி வருகிறது. இந்த விஷயங்களில் இருந்து பாகிஸ்தான் மக்களை திசைதிருப்ப அந்த நாட்டின் ராணுவம் முயற்சி செய்கிறது.

இதனால் தான் காஷ்மீர் தாக்குதல் நடந்து இருக்கலாம். மேலும் பஹல்காம் தாக்குதலை எடுத்து கொண்டால் உள்ளூர் மக்களின் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் யாராவது தன்னைத்தானே காலில் சுட்டுக் கொள்வார்களா? காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தால் அது அங்குள்ள சுற்றுலா துறை மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் சுற்றுலா வணிகம் பாதிக்கப்படும். இதற்கு முன்பு 22 லட்சம் முதல் 25 லட்சம் பேர் தான் சுற்றுலா சென்றனர். இப்போது இரண்டரை கோடி பேர் சுற்றுலா செல்கின்றனர். இதனை உள்ளூர் மக்கள் கெடுத்து கொள்ள விரும்பமாட்டார்'' என்றார். இதன்மூலம் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளூர் மக்களின் பங்கு இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் 48 சுற்றுலாத் தளங்கள் மூடல்..!