காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் உச்சத்தை எட்டி உள்ள நிலையில், பாகிஸ்தான் உடன் இந்தியாவுக்கு போர் ஏற்படும் சூழல் நிலவுகிறது. எல்லாவற்றுக்குமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் ஏவுகணை சோதனைகள் இந்திய பாதுகாப்பு படை சார்பில் நடத்தப்படுகிறது. பாகிஸ்தான் உடனான நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,பிரதமர் மோடியின் இல்லத்தில் அவசர ஆலோசனை நடைபெற்ற வருகிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் கலந்து கொண்டுள்ளார். பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் 48 சுற்றுலாத் தளங்கள் மூடல்..!
இதையும் படிங்க: பகல்காம் தாக்குதல் எதிரொலி..! இன்று கூடுகிறது நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம்..!