ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'கார்த்திகை தீபம்' இதுவரை இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல், இன்று முதல் இரவு 9:15 முதல் 10 மணி வரை என 45 நிமிடங்களாக ஒளிபரப்பாக உள்ளது.
இன்றைய தினம், "ரேவதி தனது தோழிக்கு போன் செய்து வெளிநாட்டுக்கு வந்துவிடலாம் என்று நினைப்பதாக சொல்ல அவள் தன்னுடைய நிறுவனத்திலேயே வேலை வாங்கி தருவதாகவும், ஒன்னும் பிரச்சனை இல்ல... ஆனால் நீ வந்துட்டா 5 வருஷம், இங்க தான் இருக்க வேண்டி இருக்கும் என்று சொல்கிறாள்.

யோசித்துப் பார்த்த ரேவதி என்னால முடியல நான் வந்துடுறேன் என்று முடிவெடுக்கிறாள். அதைத்தொடர்ந்து கார்த்திக் மாயா வீட்டிற்கு சென்று மாயாவை திட்டுகிறான். மகேஷ் காணவில்லை என்றால் அவன் காணாமல் போன இடத்தில் போய் தேடு.. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்ன பிறகும் நீ ரேவதி மேல கை வைக்கிறது ரொம்ப தப்பு என எச்சரிக்கிறான்.
இதையும் படிங்க: Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக் - ரேவதி போடும் புது பிளான்? கார்த்திகை தீபம் அப்டேட்!
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ரேவதி விசா ஆஃபீஸ்க்கு வருகிறாள். விசா அப்ளை செய்ய அங்கிருந்த ஆபீஸர் ஏதாவது உற்றுப் பார்த்துவிட்டு கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேள்வி கேட்க ரேவதி ஆகிவிட்டது என்று சொல்கிறாள்.

அப்படி என்றால் திருமண சான்றிதழ் எங்கே என்று கேட்க ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். கண்டிப்பா அதை வைக்கணுமா என்று கேட்க ஆஃபீஸர் கண்டிப்பாக வைக்க வேண்டும் என கூறுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிய அடுத்த எபிசோடுக்கு கார்த்திருப்போம்.
இதையும் படிங்க: Karthigai Deepam: மலை உச்சியில் இருந்து தள்ளிவிடப்பட்ட ரேவதி! உயிர் பிழைத்தது எப்படி?