திருப்பூரில் தனியார் கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி, தமிழக அரசுக்கு 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 50 லட்சம் அபராத தொகையை பன்னிரெண்டு ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என்றும் எட்டு வாரங்களில் ஆசிரியர் அல்லாதவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அல்டிமேட் அறிவிப்புகள்..! சுட சுட விவாதம்.. நிறைவு பெற்றது சட்டப்பேரவை..!

எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத கல்லூரி கல்வி இயக்குனருக்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம், கல்லூரி கல்வி இயக்குனராக அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மை மற்றும் பிடிவாதம் காரணமாக அபராதம் விதிப்பதாகவும், அபராத தொகையில் 25 லட்சத்தை கல்லூரி கல்வி இயக்குனர் பூரண சந்திரனிடம் வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: காவலர்களுக்கான சேம நலநிதி ரூ.8 லட்சமாக உயர்வு..! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!