தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில், பொன்முடியின் சர்ச்சையான பேச்சு மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு ஆகியவற்றால் 2 பேரின் பதவிகளும் பறிப்போனது.

பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், இருவரின் ராஜினாமா கடிதங்களும் ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்தது. இதனையடுத்து, பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், செந்தில் பாலாஜி வகித்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கருக்கும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: மிரட்டல் அரசியல் பிஜேபியோட டி.என்.ஏ.வில் ஊறிக் கிடக்குது..! கொதித்த கோவி.செழியன்..!
அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய அமைச்சராக மனோ தங்கராஜ் இன்று பதவியேற்றார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.ன். நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிர்ப்பு... முற்றுகையிட்டு போராட்டம்..! களேபரமான உதகை..!