சட்டசபையில் முதலமைச்சரை பேசிய திராவிட மாடல் ஆட்சி 2.0 குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசி உள்ளார். பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி பம்மியதற்கு மகன் மிதுனே சாட்சி என்றும் சட்டம் ஒழுங்கு குறித்து பழனிசாமியின் பொய் குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் தோல் உரித்து உள்ளார் எனவும் கூறினார்.

முதல்வர் சொன்ன உண்மைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பழனிசாமி வழக்கம் போல் திமுகவை வசைப்பாடி உள்ளார்.,பழனிசாமி ஆட்சியில் நடந்த அவலங்களை எப்படி மறக்க முடியும்? கரப்ஷன் ஆட்சி நடத்திய பழனிசாமி அடுத்த வெர்ஷன் பற்றி எல்லாம் பேசலாமா என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: மங்குனி ஆட்சி நடத்திய இபிஎஸ் திமுக அமைச்சரவை மாற்றத்தை விமர்சிப்பதா.? ஆர்.எஸ். பாரதி பொளேர்.!
பாஜக கூட்டணியில் சேர்ந்த போதே அதிமுக வெர்ஷன் முடிந்து விட்டது என்றும் கூட்டணி ஆட்சி என்ற போதே பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது., தமிழ்நாட்டின் வரலாற்றில் பழனிசாமி ஆட்சியின் நான்கரை ஆண்டு காலம் இரண்டு காலமாக தான் இருந்தது எனவும் சாடினார். அரசியலின் கரும்புள்ளி நீங்கள்.,இனி எந்த காலத்திலும் மக்கள் மனங்களை பிடிக்க முடியாது.,

பழனிசாமிக்கு அவரது குடும்பமே முடிவுரை எழுதி விட்டது என கூறினார். தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் பாஜகவுடன் சேர்ந்த பழனிசாமியை 2026லும் மக்கள் தோற்கடிப்பார்கள் என்றும் 2026ல் பாஜக அதிமுகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் கெட் அவுட் சொல்லப்போவது உறுதி எனவும் தற்போது உள்ள 66 அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் 2026 இல் ஆறு கூட கிடைக்காது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது.. டெல்லி எஜமானர்களிடம் சொல்லிடுங்க.. நயினாரை நயப்புடைத்த ஆர்.எஸ். பாரதி!!