அரசுப்பணியில் சேர வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. அதனால் தான் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித்தேர்வுகளுக்கு விண்ணபித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தி தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என்ற அடிப்படையில் பல்வேறு அரசுப் பணிகளுக்கான போட்டி தேர்வுகளை எழுதும் விண்ணப்பத்தாரர்களுக்கான அறிவுரைகளையும் வெளியிட்டு வருகிறது.
இதையும் படிங்க: நடுங்க வைக்கும் கொலை சம்பவங்கள்! சென்னையில் இளைஞர் வெட்டி படுகொலை...

அதன்படி, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், வருவாய் கோட்டாட்சியர், டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர் ஆகிய 8 உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,இன்று முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 70 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதேபோல குரூப் 1 ஏ தேர்வுக்கு மொத்தம் 2 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க: தனித்து நிற்கதான் வீரம் தேவை..! விஜய் நிலைப்பாட்டை ஆதரிக்கும் சீமான்..!