2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி சென்னை அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற உள்ளது. புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் உள்ளன.
இந்த இரண்டு அணிகளும் 8 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று, நான்கு புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. இந்த இரண்டு அணிகளில் வெற்றி பெறும் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு சற்று அதிகரிக்கும்.

ஆனால் தோல்வியடையும் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும் என்ற நிலை உள்ளது. குறிப்பாக சென்னை அணியின் பேட்டிங் பலமாக இல்லாததுதான் தொடர் தோல்விக்கு காரணம் என சென்னை அணி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் ஜடேஜா ஒரு ஐபிஎல் தொடரில் அணி வெற்றி பெற செய்தார். அந்த அபார ஆட்டம் தற்போது அவரிடம் இல்லை என்கின்றனர் ரசிகர்கள். கடந்த 2024 ஆம் ஆண்டு சீசனில் ஜடேஜா மொத்தமாகவே 267 ரன்கள் தான் அடித்து இருந்தார்.
இதையும் படிங்க: வெளியில் மட்டுமல்ல; சொந்த மண்னிலும் ஜெயிப்போம்... செய்து காட்டிய RCB!!

தற்போதைய சீசனில் கூட ஜடேஜா எட்டு போட்டிகளில் விளையாடி வெறும் 145 ரன்கள் தான் அடித்திருக்கிறார். நடப்பு தொடரில் ஜடேஜா லக்னோ அணிக்கு எதிராக 11 பந்துகளில் 7 ரன்களும், மும்பை அணிக்கு எதிராக 35 பந்துகளில் 53 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங், ஜடேஜா தனது பேட்டிங்கில் நிறைய முன்னேற்றத்தை காண வேண்டிய சூழலில் இருக்கிறார். அதே சமயம் தற்போது அவர் முன் வரிசையில் களமிறங்குவதால் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் சில போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி இருந்தாலும் சில ஆண்டுகளாக அவர் பேட்டிங்கில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே ஜடேஜா தனது பேட்டிங்கில் என்ன செய்ய முடியும் என்பது குறித்து நாங்கள் பார்த்து வருகிறோம். தற்போது ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற சூழல் இருப்பதால் ஜடஜாவால் என்ன செய்ய முடியும். வேறு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும் நாங்கள் பார்த்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சொந்த மண்ணில் படுமோசமாக விளையாடிய SRH... அதிரடி பேட்டிங்கால் MI அபார வெற்றி!!