மலையாள திரைப்படமான ஜன கன மன மற்றும் விக்ருதி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் கொடுத்த சமீபத்திய பேட்டி ஒன்றில் “நான் ஒரு படத்தில் பணியாற்றிய போது அதில் நடித்த ஒரு நடிகர் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தார். என் ஆடையை சரி செய்ய கேரவன் சென்றபோது நான் வந்து உதவி செய்கிறேன் என சொல்லி என்னுடன் வர முற்பட்டார்.
ஆனால் அவரை கடந்து நான் சென்றுவிட்டேன். இதனை அடுத்து மற்றொரு நாள் படத்தில் ஒரு பாடல் காட்சிக்கான ரிகர்சலின் போது திடீரென அவரது உதட்டில் இருந்து ஏதோ வெள்ளையான நிறம் கொண்ட பொருள் காணப்பட்டது. அதனை பார்த்த உடனே நான் முடிவு செய்துவிட்டேன் அவர் போதை பொருள் தான் பயன்படுத்தி இருக்கிறார் என்று.

இந்த சூழலில், இதுபற்றி விசாரிக்க அன்சிபா ஹாசன், வினு மோகன் மற்றம் சாராயு மோகன் ஆகிய 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கபட்டுள்ளது. இப்படி இருக்க, குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக வந்த ஷைன் டாம் சாக்கோ பெயர் இதில் அடிபட, போலீசார் உண்மையில் அவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தனர்.
இந்த சூழலில், கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு இரவு 11மணியளவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக ரெய்டு செய்ய களமிறங்கினர். அவர்கள் ஒருபுறம் ரெய்டு செய்துகொண்டிருக்க, ஷைன் டோம் ஷாக்கோ தனது தோழிகளுடன் ஹோட்டலில் இருந்து ஜன்னல் வழியாக தப்பி ஓடியுள்ளார். எதார்த்தமாக காவல்துறையினர் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அவர் தப்பியோடிய காட்சிகள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஓ... இது தான் விஷயமா..! சினிமாவில் இருந்து விலகிய ரகசியத்தை உடைத்தார் நடிகை ரம்பா..!

இதனை குறித்து செய்தியாளர்களை சந்துத்து பேசிய போலீசார், "கொச்சியில் உள்ள ஹோட்டலுக்கு நேற்று காலை 5.30 மணிக்கு ஷைன் டோம் ஷாக்கோ ஜாலியாக வந்து இருக்கிறார். அவர் வந்த சில நிமிடங்களில் அவருடைய பெண் தோழி தனியாக வந்து வேறொரு அறையில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில், அன்று மாலை இருவரது நண்பர்களும் ஹோட்டலுக்கு பார்ட்டி கொண்டாட வந்துள்ளனர். இதனை அடுத்து எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி எங்களது சிறப்பு குழுவினர் அதிரடியாக ஹோட்டலுக்கு ரெய்டு சென்றனர். ஆனால் அவரை கையும் களவுமாக பிடிப்பதற்குள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்" என தெரிவித்தனர்.

இதனை அடுத்து, உண்மையில் ஷைன் டாம் சாக்கோ அன்று எதற்காக ஹோட்டலுக்கு வந்தார் ஏன் போலீசை பார்த்ததும் தப்பி ஓடினார், போதை கும்பலுக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை பற்றி அவரிடம் விசாரிக்க நினைத்த போலீஸ் அவரை காவல் நிலையம் வந்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் வழங்கினர். இதற்கு கட்டுப்பட்டு காவல் நிலையம் வந்த அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு ஷைன் டாம் சாக்கோவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிரைவேற்றி உள்ளனர். இதனை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் உன்னி கிருஷ்ணன், படப்பிடிப்பில் போதையில் நடிகர் ஒருவர் தனக்கு தொல்லை கொடுத்ததாக நடிகை வின்சி அலோசியஸ் கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.

நடிகரின் பெயரை தயவு செய்து வெளியிடவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். அவரிடம் சட்டத்தின்படி உள்புகார்கள் குழுவில் புகார் அளிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது. இதனை அடுத்து, படப்பிடிப்பு தளத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது குறித்து விசாரிக்க நடிகர் ஷைன் டாம் சாக்கோவையும் அழைத்தோம். அப்பொழுது வந்த அவர் தான் போதைப்பொருள் பயன்படுத்துவதாக எங்களிடம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்துடன், கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு நேரடியாக விவாதித்தது. அப்பொழுது போதைப்பொருள்களை பயன்படுத்துபவர்களுடன் நாங்கள் நடிக்க ஒத்துழைக்க மாட்டோம். ஏற்கனவே போதைப் பொருட்களுடன் பிடிபட்ட ஒப்பனை கலைஞர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படி இருக்க, நடிகர் ஷைன் டாம் சாக்கோவை மட்டும் எப்படி தண்டிக்காமல் இருக்க முடியும். ஆதலால் அவரை திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்த முடிவுக்கு பிறகு நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு, இன்னொரு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் நாங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், அவரை மீண்டும் நடிக்க அனுமதிக்கலாமா வேண்டாமா என தற்போது உள் புகார்கள் குழு அறிக்கைக்கு பின் பார்த்துக்கொள்ளலாம் என நாங்கள் காத்திருக்கிறோம்.
இதையும் படிங்க: ஓடிடியில் ஃபிளாப் ஆன நயன்தாராவின் "டெஸ்ட்"..! உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி..!