கோலிவுட் மற்றும் பாலிவுட் சினிமா துறையில் தற்பொழுது கவர்ச்சி என்பது சாதாரணமாக மாறியுள்ளது. கவர்ச்சி இல்லை என்றால் படமே இல்லை என்ற நிலை மாறியுள்ளதால், படங்களில் கிளாமர் காட்சிகள் இப்பொழுது வரும் படங்களில் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது எனலாம். அப்படி பட்ட சினிமா துறையில் முகத்தில் கவர்ச்சியையும் புன்னகையில் ஆளை மயக்கியும் கண் அசைவில் கவர்ந்து இழுத்தும் வந்தவர் தான் நடிகை ரோஜா. இவரது நடிப்பிற்கும் நடனத்திற்கும் பேச்சிற்கும் சிரிப்பிற்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அப்படி பட்டவர் இன்று மட்டும் அரசியலுக்கு செல்லாமல் நடிக்க இருந்துருந்தால் இன்றும் அவர்தான் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருந்திருப்பார்.

பல படங்களில் சேலையில் குடும்ப பெண்ணாகவும் மாடர்ன் உடையில் கவர்ச்சி கன்னியாகவும் வளம் வந்தவர் தான் ரோஜா என்கின்ற ஶ்ரீலதா ரெட்டி. இப்படி பட்ட ரோஜா ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர். இவரது தந்தையான நாகராஜா ரெட்டிக்கு தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுக்க ஆசை. அவரால் சினிமாவில் ஜெயிக்க முடியாவிட்டாலும் தனது கனவை மகள் நிரைவேற்றுவார் என ரோஜாவை சினிமாவில் நடிக்க வைத்தார்.
அந்த வகையில், 'பிரேம தபசு'என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் ராஜேந்திர பிரசாத்துக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் ரோஜா. அந்த முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்க, பல தயாரிப்பாளர்கள் முதல் இயக்குனர்கள் வரை ரோஜாவை நடிக்க வைக்க போட்டி போட்டனர். இப்படியே தெலுங்கில் படபடவென பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக மாறினார்.
இதையும் படிங்க: புருஷன் ஜெயிக்கணும்னா பொண்டாட்டியிடம் தோற்கணும்..! நடிகை ரோஜா காமெடி பேச்சு..!

இதனை அடுத்து அவரை எப்படியாவது தமிழ் சினிமாவில் அழைத்து வர வேண்டும் என பல இயக்குனர்கள் போராட, 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்' உள்ளிட்ட சூப்பர் ஹிட் ஆக்ஷன் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, 'செம்பருத்தி'என்ற படத்தில் அவரை நடிக்க வைத்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் தான் ஆந்திரா முகமான ஶ்ரீலதா ரெட்டியை தமிழ் சினிமாவுக்குக் அறிமுகப்படுத்தியதோடு, அவருக்கு 'ரோஜா'என புதுப்பெயர் சூட்டிய, பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் ஆர்.கே.செல்வமணி. இதனை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்தவர் தனது திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை பெரிதளவில் குறைத்து கொண்டார். படத்தில் நடிக்காவிட்டாலும் ஆந்திரா அரசியலில் அனைவரையும் தண்ணிகுடிக்க வைத்து வருகிறார் நடிகை ரோஜா.

இப்படி நடிப்பில் அழகிய மயிலாகவும், பேச்சில் குயிலாகவும், அரசியலில் சிங்கமாகவும் இருக்கும் ரோஜாவை உண்மையிலேயே அயன் லேடி என்றே சொல்லலாம். அப்படி பட்டவர் குடும்ப வாழக்கையை குறித்து பேசியது சமூக வலைத்தளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன்படி, சமீபத்திய பேட்டி ஒன்றில், "நானும் எனது கணவர் செல்வமணியும் காதலித்த நேரத்தில் எங்களுக்கு என தனிப்பட்ட ஆசைகள் இருந்தன.
அதில் முக்கியமான ஆசை என்றால் குழந்தைகள். அப்பொழுதே நாங்கள் இருவரும் 24 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என தீர்க்கமாக முடிவு செய்திருந்தோம். அந்த குழந்தைகளை உலக நாடுகள் போற்றும் வகையில், வளர்க்க வேண்டும். பல தேசங்களில் பணிபுரிய வைக்க வேண்டும் என்றெல்லாம் பல ஆசை எங்களுக்கு இருந்தது. ஆனால், அப்போது எனக்கு குழந்தை பிறக்காது என்று மருத்துவர்கள் சொன்ன உடன் என் மனது சுக்குநூறாய் உடைந்து போனது.

பின், கடவுளின் அருளால் எனக்கு இரண்டு அழகான குழந்தைகள் கிடைத்தனர்" என்று கண்கலங்கியபடி தெரிவித்துள்ளார் ரோஜா.
இதையும் படிங்க: குடும்பத்தினருடன் போட்டோ ஷூட் நடத்திய அஜித்குமார்..! பத்மபூஷன் விருது பெற்றதில் மகிழ்ச்சி..!