மக்களால் ஆண்ட்ரியா என்று அழைக்கப்படும் இவரது முழு பெயர் ஆண்ட்ரியா ஜெறேமியா.சென்னையை சேர்ந்த இவர், தன்னுடைய சிறுவயது முதல் "யங் இசுடார்சு" என்னும் குழுவில் பாடி வந்தார்.அதன் பின் நடிப்பிலும் ஆர்வம் காட்டிய ஆண்ட்ரியா,கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார். பின்னர், கல்லூரி படிப்பை முடித்த ஆண்ட்ரியாவுக்கு திரைப்படங்களில் பாட வாய்ப்புகள் கிடைத்தது.
அதில் பின்னணி பாடகராக அறிமுகமான இவர், தொரடர்ந்து கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், போன்ற படங்களில் பாடினார். பின் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் சேம்சு சீகலின் ஆங்கில நாவலான தீரெயில்டுவின் கதையைக் கொண்டது.

அதன் பின், செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கினார். பின், 2011-ம் ஆண்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில், வெளியான "மங்காத்தா" திரைப்படத்திலும் நடித்தார். இவர், கமல்ஹாசனுடன், நடித்த "விஸ்வரூபம்" திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது, அதில் கமல்ஹாசனுடன் இவர் ஆடிய பரதத்தையும் மறக்க முடியாது. அதன் பின், வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான "வட சென்னை" திரைப்படத்திலும் நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிக்காட்டினார்.
இதையும் படிங்க: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்..! சமூக வலைத்தளத்தில் கண்டனங்களை பதிவிட்டு வரும் சினிமா பிரபலங்கள்..!

இப்படி இருக்க, காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பைசரன் பகுதியில், ஏப்ரல் 22 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் குழு என்று கருதப்படும் தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.

இந்த சூழலில், நடிகை ஆண்ட்ரியா தனது சமூக வலைதள பக்கத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினரை நினைத்து மனம் உடைந்து போனேன். மேலும், இச்சம்பவத்திற்குப் பிறகு காஷ்மீர் மக்கள் இன்னும் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை நினைத்தும் மனம் உடைகிறது. நாட்டில் பிரிவுவாதம் அதிகரித்துவரும் இக்கட்டான இச்சூழலில், குறிப்பிட்ட மதம்/சமூக மக்களுக்கு எதிரான வெறுப்பு பரவலுக்கு, குடிமக்களான நாம் இரையாகிவிடாமல் இருக்க வேண்டும். என கூறி இருந்தார்.

இந்த நிலையில், நடிகை ஆண்ட்ரியா தற்பொழுது துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் ஏற்கனவே அவர் சுற்றுலா சென்று புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த நினைவுகளை தற்பொழுது தனது இன்ஸடாவில் பகிர்ந்த ஆண்ட்ரியா, அதன் கீழ், "அங்கு நானும் சுற்றுலா சென்ற பயணிதான். சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் சென்று வரும் ஒரு சுற்றுலா பகுதியை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடத்த, எப்படி தான் அவர்களுக்கு மனம் வந்ததோ என எனக்கு தெரியவில்லை. இந்த தகவல் எனது மனதை சுக்குநூறாய் உடைத்து விட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்பொழுது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்..! சமூக வலைத்தளத்தில் கண்டனங்களை பதிவிட்டு வரும் சினிமா பிரபலங்கள்..!