அதாவது, இசக்கியை ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஸ் செய்து வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். வேலையில் சேர்ந்த வீரா சந்தோசமாக வீட்டிற்கு வருகிறாள். இசக்கி முடியாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவள் நடந்த விஷயத்தை கேட்டு நீ வேலை செய்யாமல் இருக்க மாட்டியா என்று திட்டுகிறாள். இசக்கி வேலை செய்யாமல் எப்படி இருக்க முடியும் என்று வீரா இனிமே இப்படி பண்ணாத ஒழுங்கா ரெஸ்ட் எடு என்று சொல்கிறாள்.
அடுத்து சண்முகம் ரூமுக்கு வந்து பரணிக்கு நன்றி சொல்கிறான். பரணி இது என்னுடைய கடமை என்று சொல்கிறாள். என் குடும்பத்தில் என்ன பிரச்சனையா இருந்தாலும் நீ வந்து நிற்கிற என்று சொல்ல உன் தங்கச்சிகளுக்குனு சொல்லு என்று பரணி பதில் கொடுக்கிறாள்.

தங்கைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தனக்கும் கொடுக்கவில்லை என்று பரணி வருத்தத்தை பதிவு செய்கிறாள். இன்னொரு பக்கம் சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா ஆகியோர் கூட்டு சேர்ந்து அடுத்து என்ன பண்ணுவது என்று யோசிக்கின்றனர்.
இதையும் படிங்க: Anna Serial: இரண்டு உசுரையும் காப்பாற்றினாளா பரணி? ஏமாறும் வீரா - அண்ணா சீரியல் அப்டேட் !
சௌந்தரபாண்டி நான் குழந்தையை பூமிக்கு வர விட மாட்டேன். அதுக்கு முதல்ல அந்த இசக்கி இந்த வீட்டிற்கு வரணும்.. பாக்கியத்தை எப்படியாவது ஏற்றி விட்டு அவளை இங்க கூட்டிட்டு வர வைக்கணும். அந்த குழந்தை கலைந்தாலும் நம்ம மேல பழி வராது. அதுக்கு தான் அந்த குடும்பத்துல முதல் வாரிசு தங்காதுனு முன்னாடியே நம்ப வைத்தேன் என்று சொல்கிறார்.

பிறகு பாக்கியம் வர சௌந்தரபாண்டி இசக்கி எப்படி இருக்காளாம் என்று நலம் விசாரிக்கிறார். உன் மருமகள் உன் கண்ணு முன்னாடி இருந்தா நீ நிம்மதியா இருக்கலாம்ல.. அவங்க அங்க இருக்கிறதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு என்று கேட்கிறார். பாக்கியம் சௌந்தரபாண்டி சொல்றது சரி என யோசித்தாலும் அதே சமயம் அவளுக்கு சிறு சந்தேகமும் இருக்கிறது. பாக்கியமும் இசக்கி தன்னோட இருந்தால் நல்லா இருக்கும் என யோசிக்கிறாள்.
இதனை தொடர்ந்து அடுத்த நாள் வீரா வேலைக்கு பெருசா ஈடுபாடு இல்லாமல் கிளம்ப இதை பார்த்த சண்முகம் பிடிச்ச வேலைக்கு போக ஏன் இப்படி விருப்பமே இல்லாமல் போறா என்று சந்தேகமாக கேள்வி எழுப்புகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய இதே ஆவலோடு நாளைய எபிசோடுக்காக கார்த்திருப்போம்.
இதையும் படிங்க: பலித்தது பாக்கியத்தின் கனவு! இசக்கிக்கு ஆபத்தில் இருந்து மீள்வரா? அண்ணா சீரியல் அப்டேட் !