அதாவது, கார்த்திக் ரேவதியை தேடி செல்லும் போது ரவுடியின் மனைவியை சந்திக்கிறாள். கார்த்திக் காப்பாற்றியது அவனுடைய குழந்தை தான் என்று தெரிய வர அவர்கள் கார்த்தியிடம் ரேவதி கடத்தப்பட்ட விஷயத்தை சொல்லி விடுகின்றனர்.
பிறகு கார்த்தியும் ரவுடியும் பைக்கில் செல்வதை பார்த்த மாயா அதிர்ச்சி அடைகிறாள். கார்த்திக்கு விஷயம் தெரிந்து விட்டது என்பதால் உடனடியாக ரவுடிகளுக்கு போன் செய்து ரேவதியை கொன்னுடுங்க என்று ஆர்டர் போடுகிறாள்.

ரௌடிகள் ரேவதியை மலை உச்சிக்கு அழைத்து செல்கின்றனர். அங்கிருந்து தள்ளி விடுகின்றனர், ரேவதி ஒரு மரக்கிளையை பிடித்து கொண்டு உயிருக்கு போராடுகிறாள். அடித்து பிடித்து சம்பவ இடத்திற்கு வந்த கார்த்திக், ரவுடிகளிடம் சண்டை போட்டு... மரக்கிளையில் தொங்கியபடி இருந்த ரேவதியை பத்திரமாக உயிரை பணயம் காப்பாறுகிறான்.
இதையும் படிங்க: Karthigai Deepam: புது தாலியோடு கிடைத்த சடலம்! அதிர்ச்சியின் உச்சத்தில் கார்த்திக்!
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? கார்த்தியை தன்னுடைய வாழ்க்கை துணையாக ரேவதி ஏற்றுக்கொள்வாரா? என்பது குறித்து எதிர்பார்ப்புடன் கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இதையும் படிங்க: Karthigai Deepam: மாயா போட்ட திட்டம்... கடத்தப்படும் ரேவதி! காப்பாற்றுவானா கார்த்திக்?