தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். இது இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதை அடுத்து அவர் தற்போது இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி இட்லி கடை படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்துக்குப் போட்டியாக தனுஷின் இட்லி கடை படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், கடைசியில், அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னமும் முடிவு பெறாத சூழலில் ரிலீஸ் தேதி அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மீண்டும் தனுஷை வைத்து ஒரு படம் தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்னதாக அட்வான்ஸ் தொகையாக 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். ஆனால் கதிரேசன் படத்தில் தனுஷ் நடிக்க முடியாது என தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனுஷுக்கு ரெட் கார்டு போட வேண்டும் என்கிற அளவுக்கு கதிரேசன் சென்றார்.
இதையும் படிங்க: சூடுபிடித்த தனுஷ் கால்ஷீட் விவகாரம்.. தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.16 கோடி கேட்டு கடிதம்!!

இதுமட்டுமின்றி தற்போது இட்லி கடை படத்தின் தயாரிப்பு பணிகளுக்கும் இது தடையாக மாறியதாக சாமீபத்தில் பேட்டி ஒன்றில் இட்லி கடை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியிருந்தார். இதனிடையே தான் வாங்கிய 3 கோடி ரூபாய் அட்வான்ஸை வட்டியுடன் சேர்த்து 6 கோடி வரை தந்துவிடுவதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு கதிரேசன் சம்மதிக்காத நிலையில், நாசர் உள்ளிட்ட நடிகர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி 8 கோடி ரூபாய் வரை பெற்றுத் தர சம்மதித்துள்ளனர்.

ஆனால், தனக்கு 16 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் தான் இந்த பிரச்னையை தீர்க்க முடியும் என ஃபைவ் ஸ்டார் கதிரேசன் கூறியதாக தெரிகிறது. இல்லையென்றால், தனக்கு பணமே வேண்டாம் கால்ஷீட் கொடுங்க தனுஷ் எனக் கேட்க, தனது தற்போதைய மார்க்கெட் அதிகரித்துவிட்டது என்றும் உங்கள் பேனரில் படம் பண்ண முடியாது என்றும் அப்படியே பண்ண வேண்டும் என்றால் இயக்குநர் வெற்றிமாறனை அழைத்து வாருங்கள் என தனுஷ் கூறிவிட்டார். இதனால், தான் இந்த பிரச்னை பூதாகரமானது. நயன்தாரா - தனுஷ் வழக்கு ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க கதிரேசன் - தனுஷ் வழக்கும் தற்போது பிரச்சனையாகியுள்ளது.
இதையும் படிங்க: எப்படி உங்களால மனசாட்சியில்லாம பேச முடியுது.. நடிகர் மீது தயாரிப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!!