பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும், அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கும் இடையே ஒற்றுமைகள் காணப்படுவதால், கடந்த ஆண்டு ஹமாஸ் மூத்த நிர்வாகிகள் பாகிஸ்தானுக்கு பல முறை சென்றதாக உளவுத்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஹமாஸ் குழு சமீபத்தில் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகத்தையும் பார்வையிட்டது. கடந்த மாதம் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீரால் திறந்து வைக்கப்பட்ட பாகிஸ்தான் இராணுவ வசதியும் இதில் அடங்கும். ராஜஸ்தானுக்கு மிக அருகில் இருப்பதால் எல்லைப் பாதுகாப்பு, விரைவான நிலைநிறுத்தலைக் கொண்ட பாகிஸ்தான் இராணுவ அமைப்பான பஹவல்பூர் கார்ப்ஸ் இந்தப் பகுதியில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: 42 spots டார்கெட்- தடயமின்றி அழிக்கும் ஏவுகணைகளை இந்தியாவுக்கு வழங்கிய இஸ்ரேல்..! பாகிஸ்தானுக்கு பேரழிவு..!
பிப்ரவரியில், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-மொய்பாவின் உயர்மட்ட உறுப்பினர்கள், 'காஷ்மீர் ஒற்றுமை தினத்தில்' ஹமாஸ் மூத்த நிர்வாகிகளின் உரையாற்றுவதற்காக பாகிஸ்தான், காஷ்மீரின் ராவலகோட்டில் கூடியதாக கூறப்படுகிறது. அல் அக்சா வெள்ளம் என்ற தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், யூதர்கள், முஸ்லிம்கள் இருவராலும் உரிமை கோரப்படும், நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய இடமாக இருந்து வரும் ஜெருசலேமில் உள்ள மசூதியைக் குறித்து உரையாற்றினார்கள்.

இஸ்ரேல் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் போராட்டம்
ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் காலித் கதூமி உரையாற்றினார். இங்குள்ள பயங்க்கரவாத அமைப்புகள் இந்த நிகழ்வை ஜம்மு-காஷ்மீரில் தங்கள் ஜிஹாதி பிரச்சாரத்தை, இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீன போராட்டத்துடன் இணைக்கும் முயற்சியாகக் கருதினர். இரண்டையும் "ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்பு" என்று முன்னிருத்தின. கடந்த ஒரு வருடமாக, குறிப்பாக 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் ஹமாஸின் இருப்பு அதிகரித்ததற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன.

இஸ்ரேல் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் போராட்டம்
கடந்த ஆண்டு ஜனவரியில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்ற ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் காலித் கதூமி அழைக்கப்பட்டார். சிறப்பாக ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் காலித் கதூமி யை வரவேற்ற ஒரு பாகிஸ்தான் சட்டமன்ற உறுப்பினர், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) மற்றும் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (BRI) ஆகியவற்றை எதிர்கொள்ளும் நோக்கில் இந்தியாவும், இஸ்ரேலும் ஒரு பொருளாதார வழித்தடத்தை, இந்திய மத்திய கிழக்கு ஐரோப்பிய வழித்தடத்தை- திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

ஹமாஸ் பயங்கரவாதியுடன் பாகிஸ்தான் தீவிரவாதத் தலைவர் சந்திப்பு
"அந்தத் திட்டம் இப்போது காசாவின் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளது" என்று அவர் பெருமையாகக் கூறினார். ஹமாஸின் அப்போதைய தலைவரான இஸ்மாயில் ஹனியே இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானிடம் உதவி கோரிய சிறிது நேரத்திலேயே ஹமாஸ் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் மீற்கொண்டனர். ஜூலை 31, 2024 அன்று தெஹ்ரானில் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதை, பாகிஸ்தான் தேசிய துக்க தினமாக அறிவித்தது.

"கடந்த ஆண்டு கராச்சியில் ஹமாஸ் தலைவர்கள் 'அல்-அக்ஸா மில்லியன் அணிவகுப்பு' நடத்தினர். இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட 15 பாலஸ்தீன கைதிகளை பாதுகாக்க ஒப்புக்கொண்டதற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் காலித் கதூமி பாகிஸ்தானை 'மூத்த சகோதரர்' என்றும் கூறப்படுகிறது.

ஹமாஸ் பயங்கரவாத தலைவர் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தானில் கண்டனம்
இந்நிலையில், ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுடன் இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் ஒப்பிட்டுள்ளார். பொதுமக்களை குறிவைப்பதில், ஹமாஸ்- பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களிடையே வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பு குறித்தும் அவர் எச்சரித்தார்.
"பயங்கரவாதிகள் அனைத்து மட்டங்களிலும் ஒத்துழைத்து, ஒருவருக்கொருவர் கைகொடுக்க முயற்சிக்கின்றனர். அவர்களைத் தோற்கடிக்க உளவுத்துறை அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்று நான் நம்புகிறேன். பஹல்காமில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டது, இஸ்ரேலில் 1,400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைமையிலான தாக்குதலுக்கு இணையானது.

இஸ்ரேல் தூதர் ரூவன் அசார்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த ஹமாஸ்- பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் ஒருவருக்கொருவர் ஊக்கமளித்து வருகின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். பஹல்காம் தாக்குதலுக்கும் அக்டோபர் 7 (2023) அன்று இஸ்ரேலில் நடந்ததற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. அப்பாவி சுற்றுலாப் பயணிகள் பஹல்காமில் தங்கள் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் இஸ்ரேலில் மக்கள் இசை விழாவைக் கொண்டாடினர். ஹமாஸ் தலைவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சமீபத்தில் பயணித்துள்ளனர். அங்கு அவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் உள்ளிட்ட சிலரை சந்தித்துள்ளனர்'' என்கிறார் இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார்.

காஷ்மீர் பஹல்காம் பள்ளத்தாக்கில் ஹமாஸ் பயங்கரவாதிகள்
பிப்ரவரி 5 ஆம் தேதி ஹமாஸ் தலைவரின் முன்னிலையில் PoK இந்தியா எதிர்ப்பு பேரணி அதிர்ச்சி வீடியோ கீழே...
PoK anti India rally of 5th February, with presence of Hamas leader https://t.co/z6a1sryZeC pic.twitter.com/esQkFBpIKJ
— Sidhant Sibal (@sidhant) February 6, 2025
இதையும் படிங்க: பாக்.,-ன் சிந்து நதி நீரை எப்படி தடுக்க முடியும்..? எங்கே சேமிக்கும்..? இந்தியா போட்டு வைத்த மாஸ்டர் ப்ளான்..!