பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு உதகையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பல பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். இந்த நிலையில் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உரையாற்றினார். அப்போது, கல்வியின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் மாநில அரசின் பல்கலை கழக துணை வேந்தர்கள் பங்கேற்கவில்லை என தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்த பின்னர்தான் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டதாகவும் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் நிதிநிலைமை மோசமாக உள்ளது என்றும் கூறினார். மாநாட்டில் பங்கேற்க கூடாது என அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிர்ப்பு... முற்றுகையிட்டு போராட்டம்..! களேபரமான உதகை..!