தமிழ் திரையுலகில் பல இயக்குனர்கள் வந்தாலும் 1978-ம் ஆண்டு வெளியான "அவள் ஒரு பச்சை குழந்தை" என்னும் தமிழ் திரைப்படத்தினை இயக்கி தலைசிறந்த இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவரது சினிமா பயணத்தை குறித்து சற்று அலசி பார்த்தால், ராமநாதபுரத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் பிறந்த எஸ்.ஏ.சந்திரசேகர். தனது படிப்பை முடித்துவிட்டு சென்னையில் அரசாங்க வேளையில் பணிபுரிந்து வந்தார். நல்ல வருமானம் வந்தபோதிலும் சினிமா மீதுள்ள ஆர்வம் அவரை வருடி இழுத்தது. இதனால் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த 'எங்க வீட்டு பிள்ளை' திரைப்படத்தில் சவுண்டு இன்ஜினியராக தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார்.

அதன்பின், இயக்குனர் டி.என்.பாலுவிடம் உதவி இயக்குனராக சேர்ந்த சந்திரசேகர், அவருடன் இணைந்து எங்க வீட்டு பிள்ளை, ஆசைமுகம், நான் ஆணையிட்டால், மனசாட்சி, அஞ்சல் பெட்டி 520, வசந்த மாளிகை, எங்கள் தங்க ராஜா, திருமாங்கல்யம், உத்தமன் உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்து தன்னை இயக்குனராக தயார் செய்து கொண்டார்.
இதனை அடுத்து இயக்குனராக களமிறங்கிய சந்திரசேகர் 'அவள் ஒரு பச்சை குழந்தை' என்ற படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்றார். இதனை தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு, வெற்றி, நீதிக்கு தண்டனை, தோஸ்த், முத்தம் என இதுவரை 70 பதிற்கும் மேற்பட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் விஷயத்தில் தவறு செய்துவிட்டேன்...! மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்..!

இதுவரை அவள் ஒரு பச்சை குழந்தை, சட்டம் ஒரு இருட்டறை, நீதி பிழைத்தது, சாதிக்கொருநீதி, நெஞ்சில் துணிவிருந்தால், இதயம் பேசுகிறது, ஓம் சக்தி, பட்டணத்து ராஜாக்கள், சாட்சி, சம்சாரம் என்பது வீணை, வீட்டுக்கு ஒரு கண்ணகி, குடும்பம், வெற்றி, நான் சிகப்பு மனிதன், புதுயுகம், நீதியின் மறுபக்கம், சிவப்பு மலர்கள், என் சபதம், நிலவே மலரே, வசந்த ராகம், எனக்கு நானே நீதிபதி,

சட்டம் ஒரு விளையாட்டு, நீதிக்கு தண்டனை, இது எங்கள் நீதி, சுதந்திர நாட்டின் அடிமைகள், பூவும் புயலும், ராஜநடை, சீதா, நண்பர்கள், இன்னிசை மழை, நாளைய தீர்ப்பு, செந்தூரபாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, மாண்புமிகு மாணவன், ஒன்ஸ்மோர், ப்ரியமுடன், நெஞ்சினிலே, பெரியண்ணா, தோஸ்த், தமிழன், முத்தம், சுள்ளான், சுக்ரன், ஆதி, நெஞ்சிருக்கும் வரை, பந்தயம், வெளுத்து கட்டு, சட்டப்படி குற்றம், டூரிங் டாக்கீஸ், கொடி, நையப்புடை, ஆருத்ரா, டிராபிக் ராமசாமி, கேப்மாரி, மாநாடு, தமிழ்க்குடிமகன், நான் கடவுள் இல்லை, கருமேகங்கள் கலைகின்றன போன்ற படங்களை இயக்கி நடித்து உள்ளார்.

இப்படி இருக்க, எஸ்.ஏ.சந்திரசேகர் 1973-ம் ஆண்டு ஏப்ரல் 26-ந் தேதி ஷோபாவை திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த தம்பதிக்கு அமைதியாக பிறந்தவர் தான் நடிகர் விஜய். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி கிட்டதட்ட 52 ஆண்டுகள் ஆன நிலையில், நாளை இருவரும் 52வது திருமண நாளை கொண்டாட உள்ளனர். இந்த நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய காதல் மனைவியான ஷோபாவுக்கு அட்டகாசமான சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார். அதன்படி, பி.எம்.டபிள்யூவில் விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து தனது மனைவியை குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் "கல்யாணம் ஆகி எனக்கு 52 ஆண்டுகள் ஆகியுள்ளது . இத்தனை ஆண்டுகள் என்னுடன் ஏற்பட்ட கஷ்டம், இன்னல்கள், யாவற்றிலும் உறுதுணையாக இருந்தவர் என் மனைவி ஷோபா. கல்யாணம் ஆன புதிதில் என் மனைவிக்கு எவ்வளவோ கிப்ட் கொடுத்துள்ளேன். ஆனால் இப்பொழுது இந்த வயதில் அவர் மீது வைத்துள்ள அன்பிற்கு அடையாளமாக இந்த காரை கொடுத்துள்ளேன்" என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: காஷ்மீர் கொடூர தாக்குதல் சம்பவம்..! அதே இடத்தில் தான் இருந்த புகைப்படங்களை பகிர்ந்து ஆண்ட்ரியா வருத்தம்..!