ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அமெரிக்க துணை அதிபர் இந்தியாவில் இருக்கும் நேரத்தில், நட்பு நாடான சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி சென்ற நேரத்தில்., இந்த தீவிரவாத தாக்குதல் நடந்திருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

இதன் காரணமாக தனது பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடி இந்தியா திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறினார். பகல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்றும் பதிலடி கொடுப்பதற்கான பாணியில் மத்திய அரசு ஏற்கனவே இறங்கிவிட்டது எனவும் குறிப்பிட்டார். மேலும், மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என கூறிய அண்ணாமலை, சரியான நேரத்தில், சரியான இடத்தில் மத்திய அரசு பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கையாலாகாத திமுக அரசு.. எப்பவுமே தப்ப மறைக்க தான் பார்க்குது.. மூக்குடைத்த அண்ணாமலை..!

சமூக வலைத்தளங்களில் ஆக்ரோஷமான பதிவுகளை போடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், அரசும், அரசு இயந்திரங்களும் சரியான நேரத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் எனக் கூறினார். அனைவரும் அவரவர் வேலைகளை செய்ய வேண்டும் என்றும் நாம் நம்முடைய வேலையை நிறுத்தினால் தான் பயப்படுகிறோம் என நினைப்பார்கள்., எனவே காஷ்மீர் செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் தாராளமாக சென்று வாருங்கள் எனக் கூறினார்.
அரசியல் பேசுபவர்கள் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள் என்றும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற எட்டு நிமிடங்களில் தீவிரவாத தாக்குதல் நடந்ததாகவும் குறிப்பிட்ட அண்ணாமலை, பாகிஸ்தானும் ஐஎஸ்ஐ அமைப்பும் இந்தியாவில் அமைதியை குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதாக கூறினார்.
இதையும் படிங்க: அண்ணாமலையை தவிர்த்த நயினார் நாகேந்திரன்... தொண்டர்களுக்கு போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!