அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற நாள் முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை நாடு கடத்தினார். அதில் இந்தியர்கள் 300க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதனிடயே டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது.
இருந்தபோதிலும் டிரம்ப் நாடு கடத்துவதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே கியூபா, ஹைட்டி, நிகரகுவா மற்றும் வெனிசுலா ஆகிய நாட்டை சேர்ந்தவர்களின் சட்டப் பாதுகாப்பை ரத்து செய்யப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தார். மேலும் அவர்களை ஒரு மாதத்தில் நாடுகடத்த போவதாகவும் தெரிவித்தார்.

இதன்மூலம் சுமார் 5 லட்சத்து 32 ஆயிரம் பேர் உள்ளனர் நாடு கடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான இந்தியர்களும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். அதுபோக தேர்தல் பிரசாரத்தில் தனக்கு பக்க பலமாக இருந்த எலான் மஸ்க்கிற்கு டாட்ஜ் எனப்படும் செலவின கட்டுப்பாட்டு துறை தலைவர் பொறுப்பை கொடுத்தார். எலான் மஸ்க்கும் பல்வேறு துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை அமெரிக்கர்களுக்கே அதிருப்தி அளிக்கும் வகையில் கூட அமைந்து இருந்தது. குறிப்பாக பரஸ்பர விரி விதிப்பு விவகாரத்தில் டிரம்பிற்கு எதிராக பெரும் போராட்டம் அமெரிக்காவில் நடைபெற்றது.
இதையும் படிங்க: இந்தியா, பாகிஸ்தானை அழித்துவிடும்... சீனாவால் எதுவும் செய்ய முடியாது... அமெரிக்கா அமைதியாக இருக்கும்..!

இந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்பியான ஸ்ரீ தனேடர் டிரம்பிற்கு எதிராக தகுதி நீக்க தீர்மானத்திற்கு நோட்டீஸ் அளித்துள்ளார். டிரம்ப் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும், கொடுங்கோன்மை மற்றும் அரசியல் அமைப்பு மீறல்கள் நடப்பதாகடும் ஸ்ரீ தனேடர் கூறியுள்ளார். டிரம்பிற்கு எதிராக, தான் பதவி நீக்கம் ஆர்டிகிள் கொண்டு வரப்பட்டு இருப்பது பற்றி தனது எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது. பிறப்பின் மூலம் பெறும் குடியுரிமை, மனிதாபிமான உதவிகள் நிறுத்தம், நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் உள்ளிட்ட டிரம்பின் நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் ஆகும்.

இதற்கு மேல் பொறுக்க முடியாது என்பதால் டிரம்பிற்கு எதிராக தகுதிநீக்க தீர்மானம் அறிமுகம் செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீ தனேடர் அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள 13 மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீ தனேடர், அமெரிக்காவுக்கு கடந்த 1979 ஆம் ஆண்டு உயர் படிப்புக்காக குடி பெயர்ந்தார். அக்ரோன் பல்கலைக்கழகத்தில், வேதியியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். 1998 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர் தொழில் துறையில் சாதனை படைத்தார்.
இதையும் படிங்க: 100%, 200%-லாம் இல்ல 3,521% வரி; சீனாவுக்கு 245% வரி.. டிரம்ப் அதிரடி.. இந்தியாவின் நிலை என்ன?