''வேடிக்கையான உண்மை: இது ஒரு முதலமைச்சரின் வாகனத் தொகுப்பு. ஆம், ஒரு முதலமைச்சர், பிரதமர் அல்ல'' என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கான்வாயை விமர்சித்து வருகிறார்கள் வட மாநில அரசியல் விமர்சிகர்கள்.
மத்திய அரசை விமர்சிப்பது, சனாதனத்தை எதிர்ப்பது என தொடர்ச்சியாக தேசிய அளவில் லைம்லைட்டில் இருந்து வருகிறது திமுக அரசு. இந்திய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின். நேற்று 6வது முறையாக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். அவரது பதவியேற்பு விழா சென்னை ராஜ்பவனில் நடைபெற்றது. அதற்காக சென்ற மு.க.ஸ்டாலின் வாகன தொகுப்பு வீடியோ காட்சிகளை பிரபலான ஆங்கில ஊடகம் பகிர்ந்து இருந்தது.

அதை சமூகவலைதளத்தில் பகிர்ந்த ஒருவர்,''வேடிக்கையான உண்மை: இது ஒரு முதலமைச்சரின் வாகனத் தொகுப்பு. ஆம், ஒரு முதலமைச்சர், பிரதமர் அல்ல'' எனக் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த பதிவிற்கு பின்னூட்டமிட்டு வரும் பலரும், ''அவருக்கு எந்தப் பிரிவிலிருந்து அச்சுறுத்தல் இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு தேவைப்படுகிறது, யாரிடமிருந்து அச்சுறுத்தல்?
இதையும் படிங்க: முதல்வரின் போதை இல்லா விளம்பரம்… வெறும் ஒன்றரை மாதத்தில் இத்தனை கோடிகள் செலவா..?

பிற மாநிலங்களுடன் ஒப்பிட முடியாது. உயரமான கழுத்துப்பட்டை மற்றும் ஒரு ரஷ்ய பெயர், ஒரு தென்னிந்திய மாநிலத்தை அழித்த ஒரு தோல்வியுற்ற முதல்வர். இந்த சின்னஞ்சிறு முதல்வர்களுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கு? பிரதமருக்கு ஒரு பெரிய கான்வாய் இருப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ஏனென்றால் அவருடைய பாதுகாப்பு முக்கியமானது. ஆனால் ஸ்டாலினுக்கு ஏன்? யாராவது சில சரியான காரணங்களைச் சொல்ல முடியுமா? என்ன வித்தியாசம்? தமிழ்நாடு சார்... எளிமையான வாழ்க்கை சார்... ஷோ காட்டாதீங்க சார்..'' என விமர்சித்து வருகின்றனர்.
அதேவேளை ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள பலர், ''ஒரு பிரதமருக்கு 100 மடங்கு தகுதி இருக்கிறது. ஒரு முதலமைச்சருக்கு ஏன் தகுதி இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவரைச் சுற்றி அதிகமான வாகனங்களும் காவல்துறையினரும் உள்ளனர். இதை விட அவருக்கு அதிக அச்சுறுத்தல் இருப்பதாக நீங்கள் கூறுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவருடைய எல்லா அச்சுறுத்தல்களும் அவரால் மட்டுமே.
Fun Fact: This is a Convoy of a Chief Minister !!
Yes, a Chief Minister, not the Prime Minister. pic.twitter.com/Dvi5jcNXPR
— Yo Yo Funny Singh (@moronhumor) April 28, 2025
அண்ணாமலை, நடிகர் விஜய் ஆகியோர் எந்த அரசு பதவியிலும் இல்லாதபோது அவர்களுக்கு ஏன் ஒய்Y பிரிவு பாதுகாப்பு தேவை. ஏன் கேள்விகள் கேட்கப்படவில்லை? நாட்டின் இரண்டாவது பணக்கார மாநிலத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் வகிக்கும் பதவிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு கட்டாயம்'' என்கிறார்கள்.
தமிழக முதல்வரின் கான்வாய் பொதுவாக முதலமைச்சரின் பயணத்தின் போது பாதுகாப்பு மற்றும் நிர்வாக வசதிக்காக ஒழுங்கமைக்கப்படும் வாகனங்களின் தொகுப்பு. இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணங்களின் போது, குறிப்பாக அதிகாரப்பூர்வ நிகழ்வுகள், ஆய்வுகள் அல்லது பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது பயன்படுத்தப்படுகிறது.

கான்வாயில் முதலமைச்சரின் வாகனம், புல்லட் புரூஃப் வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான , பொதுவாக ஆடம்பரமான, உயர் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது. தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு (Special Protection Group) உள்ளூர் காவல்துறையின் வாகனங்கள், முதலமைச்சரின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.அவசர மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் அல்லது மருத்துவக் குழுவுடன் கூடிய வாகனமும் செல்லும். முதலமைச்சரின் உதவியாளர்கள், செயலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கான வாகனங்களும் இதில் அடக்கம்.
தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு உபகரணங்களுடன் கூடிய வாகனம், குறிப்பாக நீண்ட பயணங்களில் இடம்பெறும். கான்வாய் பயணிக்கும் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து கட்டுப்படுத்தப்படலாம். கான்வாயின் அளவு, கட்டமைப்பு, பயணத்தின் தன்மை, பாதுகாப்பு தேவைகளைப் பொறுத்து மாறுபடும்.
இதையும் படிங்க: மத்திய அரசுடன் மோதல் உச்சம்..! புது ரூட் பிடித்த ஸ்டாலின்- உருவானது மாநில சுயாட்சி உயர்மட்டக்குழு