பாகிஸ்தான் அரசுக்கு மிகப்பெரிய அவமானம் நடந்துள்ளது. துர்மேனிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதரை லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்துக்குள் நுழைய அமெரிக்க அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதனால் அவர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.
இதனால் பாகிஸ்தான் தூதர் கேகே அசன் வாகன், எங்கிருந்து புறப்பட்டாரோ அந்த நாட்டுக்கே, நகருக்கே திருப்பி அனுப்பியது அமெரிக்க அரசு. கேகே அசன் தனிப்பட்ட பயணமாக அமெரிக்காவுக்கு வந்திருந்தார். அவரிடம் முறையான விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து பயண ஆவணங்களும் இருந்தன, ஒரு நாட்டின் தூதர் என்பதற்கான அடையாள அட்டையும் இருந்தபோதிலும் அவரை லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்குள் நுழைய அமெரிக்க அரசு அனுமதியளிக்கவில்லை என தி நியூஸ் செய்திதளம் தெரிவித்துள்ளது.

தி நியூஸ் செய்தித்தளம் கூறுகையில் “ அசன் வாகன் விசாவில் சர்ச்சைக்குரிய வகையில் பரிந்துரைகள் இருந்ததால் அதை அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆதலால், எங்கிருந்து புறப்பட்டீர்களோ அங்கேயே செல்லுமாறு அதிகாரிகள் அசனிடம் தெரிவித்தனர். அவரின் பதவிகள், எந்த நாட்டின் தூதர் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து, அவர் லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்திலிருந்து அமெரிக்க அதிகாரிகளால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உன் பருப்பு என் கிட்ட வேகாது..! டிரம்பை தைரியமாக மிரட்டிய இரான் சுப்ரீம் லீடர்

பாகிஸ்தான் வெளியுறத்துறையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் கடந்த காலங்களில் பணியாற்றி மூத்த அதிகாரி. காத்மாண்டுவின் தூதராகவும், லாஞ் ஏஞ்செல்ஸ் நகரின் துணைத் தூதராகவும், ஓமன் நாடு, மஸ்கட்டிற்கு துணைத் தூதராகவும், நைஜர் நாட்டின் தூதரகாவும் அசன் இருந்துள்ளார். பாகிஸ்தான் அரசில் வெளியுறவுத்துறையில் முக்கிய பதவியிலும் அசன் பணியாற்றியநிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு தரப்பில் இதுவரை அசன் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது குறித்து விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. இருப்பினும் விரைவில் பாகிஸ்தான் அரசு அசனை திரும்ப வரக்கூறி, நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் கேட்கும் எனத் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள தூதரகதிடம் இது குறித்து விசாரணை நடத்துமாறு பாகிஸ்தான் தூதரகம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு நாட்டின் தூதருக்கே அமெரிக்காவில் அனுமதியில்லை என்பது பாகிஸ்தான் அரசுக்கு மிகப்பெரிய அவமானாகும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார் இந்தத் தடை மார்ச் 2வது வாரத்தில் நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் முன்பு தெரிவித்திருந்த நிலையில் செயல்பாட்டுக்கு வந்துவிட்டதா எனத் தெரியவில்லை.
இதையும் படிங்க: என்னது சம்மதிச்சிட்டிங்களா..! அமெரிக்க வரிக்குறைப்பு குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும்.. காங்கிரஸ் வலியுறுத்தல்..!