போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீமையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து, சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாமீனில் வெளி வந்த ஜாபர் சாதிக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தன்னை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளார்களா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா என்ற கேள்விக்கு, அரசியல் ஏறி பேச வேண்டாம் என கூறி மழுப்பலாக பேசினார். எங்கேயும் போக மாட்டேன்..உங்களோடு தான் பயணிக்க போகிறேன்., நிபந்தனை ஜாமீனில் வெளி வந்துள்ளேன்.. வழக்கு சென்றுக் கொண்டிருக்கிறது.., என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மல்லை சத்யா அரசியலுக்கு துணையா இருப்பேன்..! கோபத்தை விட்டு கிரீன் சிக்னல் காட்டிய துரை வைகோ..!
இதையும் படிங்க: யாரு நாங்க துரோகியா? தைரியம் இருந்தா அதிமுகவை பேச சொல்லுங்க பார்ப்போம்.. சீறிய துரைமுருகன்..!