பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதன் மூலமும், பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா தள்ளுபடி திட்டத்தை (எஸ்.வி.இ.எஸ்) ரத்து செய்வதன் மூலமும் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய அரசு பதிலளிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்ககு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது, பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது இன்று நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியா - பாக். இடையே போர் வெடித்தால் என்ன ஆகும்? புட்டு புட்டு வைக்கும் அமெரிக்கா சிஐஏ அமைப்பு!!

மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் விரும்பத்தகாதவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளால் கோபமடைந்த பாகிஸ்தான், தேசிய பாதுகாப்புக் குழுவின் ஆலோசனை கூட்டத்தை கூட்டியது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற இந்த இந்தக் கூட்டத்தில், ராணுவத் தளபதி அசிம் முனீர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் பாகிஸ்தானும் சில முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் இருந்து இந்தியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற வேண்டும், பாகிஸ்தான் வான்பரப்பை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது, வாகா எல்லை வழியான போக்குவரத்து நிறுத்தப்பட்டு எல்லை மூடப்படுகிறது, இந்தியாவுடனான பொருளாதார உறவுகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சிந்து நதிநீர் திறப்பை இந்தியா நிறுத்தினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் அவசர ஆலோசனை கூட்டம்... சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலினை; யாருக்கு பாதிப்பு?