டெல்லி சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து வரும் நிலையில் அதில் கடந்த ஆம் ஆத்மி அரசு கடைபிடித்த வேலைவாய்ப்புக் கொள்கைகள், டெல்லி அரசின் செயல்பாடு, வேலை வழங்கிய புள்ளிவிவரங்கள், வேலை வாய்ப்பை அதிகரிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து புள்ளி விவரங்களை அடுக்கி வெளுத்து வாங்கியது பாஜக அரசு.
2019ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை டெல்லி மாநில வேலை வாய்ப்புத்துறை இருவருக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு குறித்த 2 ஆன்லைன் தளம் மூலம் வேலை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த இரு வேலைவாய்ப்பு தளங்கள் வாயிலாக கடந்த ஆண்டு வேலைதரப்பட்டுள்ளது.

இதில் 2020ம் ஆண்டில் அரசு வேலைவாய்ப்பு ஆன்தளம் மூலம் ஒரே ஒருவருக்கு மட்டுமே டெல்லி அரசு வேலைவழங்கியுள்ளது. 2020 ஜூலை மாதம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கர் பஜார் எனும் வேலைவாய்ப்புத் தளத்தை தொடங்கியது. இது தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளில் 2023ம் ஆண்டு மூடப்பட்டது. ஆனாலும் இரு ஊழியர்கள் மூடப்பட்ட இந்த தளத்தை பராமரிக்கும் பணிக்காக ஊதியம் தரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அதிமுகவில் நீடிக்கும் குழப்பம்? நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் அவசர சந்திப்பு!
கொரோனா பரவல் காலத்தில் டெல்லி அரசு சார்பில் எந்தவிதமான வேலைவாய்புத் தளங்களும் உருவாக்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக வேலைவாய்ப்புத் தளம் வாயிலாக ஒரு வேலைகூட யாருக்கும் டெல்லி அரசு வழங்கவில்லை.
இதற்கு முன் 2009ம் ஆண்டிலிருந்து புழக்கத்தில் இருந்த (onlineemploymentportal.delhi.gov.in) தளத்தை பராமரிக்க 5 ஊழியர்களுக்கு ஊதியம் தரப்பட்டு வருகிறது. இந்தத் தளங்கள் வாயிலாக எந்த வேலைவாய்ப்பும் இளைஞர்களுக்கு வழங்காத நிலையில் இந்த தளத்தைப் பராமரிக்க 2021ம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு ரூ.34 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

2015 முதல் 2024ம் ஆண்டுகளுக்கிடையே டெல்லியில் வேலையில்லாத இளைஞர்கள் 4.40 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தனர். இளைஞர்களுக்கு வேலை வழங்க டெல்லி அரசு சார்பில் 10 ஆண்டுகளில் 10 வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 36ஆயிரம் பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், புதிதாக எந்த வேலைவாய்ப்பு அலுவலகம் திறக்கப்படுவது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக அறிவிப்பு ஏதுமில்லை.
இவ்வாறு சட்டப்பேரையில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அமலாக்கத் துறைக்கு க்ளீன் ஷீட் கொடுத்த பிரதமர் ! 22 ஆயிரம் கோடி பணத்தை மீட்டு பெருமிதம்