கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 94 சதவீதத்தை முறையாக செலவிடவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். உண்மைக்கு மாறாகவும் தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளதாக தயாநிதிமாறன் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: எந்த நேரத்திலும் திமுக கூட்டணி டமார்.. கொளுத்திப் போடும் மாஜி அதிமுக அமைச்சர்.!!

சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, எடப்பாடி பழனிச்சாமி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். விரிவான அறிக்கை பின்னர் வழங்கப்படும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: எடப்பாடி கொடுத்த விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்... மீண்டும் அதிமுகவில் பரபரப்பு!!