உதகையில் ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. அரசு, தனியார் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் அனைவருக்கும் மாநாட்டில் பங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏராளமான துணைவேந்தர்கள் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளனர். தமிழக அரசுக்கு போட்டியாக துணைவேந்தர் இந்த மாநாட்டை நடத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மூன்றாண்டு காலமாக ஆளுநர் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்று வருவதாக ராஜ்பவன் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் உதவிக்கு வருகை தந்த ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர் என்ற வி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதோடு, சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையும் படிங்க: முதல்வருக்கு போட்டியாக துணை வேந்தர்கள் மாநாடு.. ஆளுநர் மாளிகை கொடுத்த விளக்கம்..!
இதேபோல் ஆளுநரை கண்டித்து திராவிடர் தமிழர் கட்சியினர் ராஜ் பவனை முற்றுகையிட முயன்றனர். இதனால் போலீஸா இருக்கும் திராவிடர் தமிழர் கட்சியினருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை போலீசார் அப்புறப்படுத்த நினைத்த நிலையில் அந்த இடமே களேபரமானது.
இதையும் படிங்க: உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி..! துணை ஜனாதிபதியுடன் ஆளுநர் ரவி சந்திப்பு..!