மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்பேத்கர் ஜெயந்தி கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் மூத்த தலைவர் ஹச். ராஜா தலைமை வகித்தார். மதுரை மாநகர பாஜக தலைவர் மாரிசக்கரவர்த்தி உள்ளிட்ட 50 மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்று அம்பேத்கர் குறித்த கருத்து சார்ந்த கருத்தக்களை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டார்கள், தற்போது அச்சம்வத்தில் ஈடுபட்டவர்களை இந்திய ராணுவம் தேடி வேட்டையாடி வருகிறது, பாகிஸ்தானுக்கு இந்திய தக்க பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது என்றார்.

பாகிஸ்தானின் இச்செயலுக்கு உலக நாடுகள் அனைத்தும் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சரே 30 ஆண்டுகளாக தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட தயராகி வருகிறார். உள்நாட்டில் நாட்டிற்கு எதிராக பேசுவதை சிலர் கலாச்சாரமாக கொண்டிருக்கிறார்கள். சீமான், கர்நாடக முதல்வர் சித்தராம்மையா, திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி போர் தொடுக்கக் கூடாது என்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
இதையும் படிங்க: நான்னா அவ்வளவு இலக்காரமா? விசிகவை வெளியேற்ற சதி.. ஆத்திரத்தில் கொந்தளித்த திருமா..!

மத்திய அரசின் செயல்பாட்டிற்கு எதிராக பேச வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோளாக உள்ளது. சமூக வலைதளத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் 5000 ஏவுகணைகளை ஏவி 1400 மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள், ஆனால் அங்கிருக்கும் மக்கள் அந்நாட்டிற்கு எதிராக எந்த கருத்தையும் முன் வைக்கவில்லை. வெளிநாட்டில் உள்ள தேச விரோதிகளை விட உள்நாட்டு தேச விரோதிகளே அதிகம் உள்ளனர். 1947 ல் விடுதலை நாளை துக்க தினமாக அனுசரித்தவர்கள் இங்கே உள்ள திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள்.

அமெரிக்கா பல்வேறு மாகாணங்களை கொண்டிருந்தாலும் சுதந்திரத்திற்கு பிறகு அந்நாட்டுக்கு எதிராக யாரும் பேசுவது கிடையாது. ஆனால், இங்கே தேச விரோத கொள்கைகளை பேசுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதை நிறுத்திக் கொள்ள வேண்டும். யுத்தம் வரவேண்டும் என நாங்கள் விரும்பவில்லை அப்படி யுத்தம் வந்தால் அந்த நாட்டுக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்களா? என்ன? பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்களை கண்காணிப்பில் வைக்க வேண்டும். காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் மத வெறி உள்ளிருப்பது தெரிகிறது. திருமாவளவனுக்கு நாட்டுப்பற்றை கிடையாது, இவர்களைப் போன்றோரை தொடர்ந்து கண்காணிப்பில்லாமல் விட்டால் இவர்களாலே நாட்டிற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

1989-இல் காஷ்மீரில் உள்ள அனைத்து இல்லங்களிலும் பருக் அப்துல்லா முதல்வராக இருந்த நேரத்தில் ஒன்று இஸ்லாமியராக மாறு அல்லது இந்த இடத்தை விட்டு காலி செய்ய என்றும் அப்படி இல்லை என்றால் கொலை செய்யப்படுவாய் என்றும் எச்சரிக்கை போஸ்டர் ஒட்டப்பட்டது. இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் மதம் மாறிய இந்துக்கள் தான், பாகிஸ்தான் பிறந்தது, பாரதத்தை பிளந்துதானே? சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைச்சிருக்கோம், காவிரியில் நீர் கொடுக்காத துணை முதல்வரை அழைத்து ஆதரிக்கும் இந்த கூட்டம், பாகிஸ்தானுக்கு சிந்து நதியை நிறுத்துவைத்து பற்றி விமர்சனமாக பேசுகிறார்கள் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீமானுக்கு டாடா... பாஜகவுக்கு தாவும் சாட்டை துரைமுருகன்? - தம்பிகள் கதறல்..!