தமிழக மின்சாரதுறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, ஓட்டுனர், நடத்துநர் பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் பணத்தை மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி 2023 ஆம் ஆண்டு செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. அதை தொடர்ந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி 471 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியில் வந்து மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றார்.
இதையும் படிங்க: நேற்று அப்செட்... இன்று ஆப்சென்ட்... கம்பி நீட்டிய 2 மாஜி அமைச்சர்கள்!

இதனையடுத்து அமலாக்கத்துறை அவரது ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. அவர் அமைச்சராக இல்லாததால் சாட்சிகளை கலைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்ற அடிப்படை காரணத்தை வைத்துதான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா? பதவி வேண்டுமா என்பதை கூறவேண்டும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், செந்தில்பாலாஜி ராஜினாமா கடிதத்தை வழங்கி பதவியில் இருந்து விலகினார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கின் விசாரணை முடியும் வரை அவர் அமைச்சராக கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இறுதியாக, செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: இரு அமைச்சர்கள் நீக்கம்.. 2026இல் திமுக ஆட்சி அகற்றத்துக்கான தொடக்கப்புள்ளி.. அண்ணாமலை சரவெடி.!