மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் செயல்பாடுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மசோதாவை நிறுத்தி வைக்கும் உரிமை கிடையாது என்றும் மக்கள் நலனுக்கான அரசின் திட்டங்களுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்தனர்.மேலும் ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த பத்து மசோதாக்களும் சட்டமானது.இந்த நிலையில் ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றார்.

அங்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.இந்த நிலையில் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்துள்ளார். உச்சநீதிமன்ற விவகாரம் தொடர்பாகவும் 10 மசோதாக்கள் சட்டமானது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தையே அச்சுறுத்துவதா..? திமுக கூட்டணி கட்சிகளிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட குடியரசுத் துணைத் தலைவர்.!
இதையும் படிங்க: ஜனாதிபதி பெயரளவு தலைவர் தான்..! ஜெகதீப் தன்கருக்கு கபில் சிபல் கண்டனம்..!