அதாவது டீ குடித்த சண்முகம் அங்கிருந்து கிளம்பி மீண்டும் வந்து வீராவிடம் பொண்ணுங்க வெளியே வேலைக்கு வந்தாலே பொண்ணுங்க தானே என்று குறைச்சலாக தான் பார்ப்பாங்க. ஆனால் எப்பயும் தன்மானத்தை விட்டுடாதா.. உன்னுடைய தன்மானத்தை காப்பாற்றிக்கோ என்று அறிவுரை கொடுக்கிறான்.
சண்முகம் சென்றதும் ஸ்டேஷனுக்கு வரும் வீரா இன்ஸ்பெக்டரிடம் நான் படிச்சு பாஸாகி இங்க வந்திருக்கேன். உங்களுக்கு வேலை செய்ய வரல. மக்களுக்காக சேவை செய்ய வந்திருக்கேன். உங்களுக்கு டீ வேணும்னா நீங்களே போய் வாங்கிக்கோங்க என்று பதிலடி கொடுக்கிறாள்.

அடுத்ததாக பாக்கியம் மற்றும் சிவபாலன் ஆகியோர் இசக்கியை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக சண்முகம் வீட்டிற்கு வருகின்றனர். பாக்கியம் சொன்னதும் இசக்கியும் தனது துணிகளை பேக்கப் செய்கிறாள். முத்துபாண்டியும் பரணி இருந்தா அவ பார்த்துப்பா.. அவளும் இங்க இருக்க போறது இல்ல, அதனால் நாங்க வீட்டிற்கு கிளம்புறோம் என்று சொல்கிறான்.
இதையும் படிங்க: சண்முகம் மீது சந்தேகம் கொள்ளும் பரணி; சட்டையை பிடித்த முத்துப்பாண்டி - அண்ணா சீரியல் அப்டேட்!
வைகுண்டம் சண்முகம் வந்துடட்டும்.. அவன் கிட்ட ஒரு வாரத்தை சொல்லிட்டு போய்டலாம் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது பற்றி அறிய அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
இதையும் படிங்க: Anna Serial: பாக்கியத்தை ஏற்றி விடும் சௌந்தரபாண்டி! சண்முகத்துக்கு வந்த சந்தேகம்!